மார்கன்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

கொலை செய்தவர் யார் என்பதும், கொலையாளியின் பின்கதையும் தான் இந்த மார்கன்

ஹீரோ விஜய் ஆண்டனி க்ரைம் பிராஞ்ச் போலீஸ். அவர் தமிழ்நாட்டுக்காரர் என்றாலும் தன் மகளின் இழப்பிற்குப் பின் மாற்றலாகி மும்பையில் இருக்கிறார். தமிழ்நாட்டில் தன் மகள் போலவே ஒரு பெண் கொலை செய்யப்பட்டதை அறிந்து விசாரணை மேற்கொள்ள வருகிறார். கொலையாளி யார் என்ற அவரது பயணத்தில் நடக்கும் திருப்புமுனைகள் தான் மார்கனின் திரைக்கதை

வழக்கம் போல அளவாக நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. பெரியளவில் அவரிடம் போதாமை தெரியவில்லை என்பது ஆறுதல். கிட்டத்தட்ட ஹீரோ போலவே வருகிறார் அறிமுக நாயகன் அஜய் தீசன். அவருக்கு ஸ்கிரீனில் இவ்வளவு பெரிய வெளி கொடுத்தமைக்காகவே விஜய் ஆண்டனியைப் பாராட்டலாம். அஜய் தீசனும் நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளார். பிரிகிடா கொடுத்த வேலைக்கு குறை வைக்கவில்லை. மேலும் ஒரு இயக்குநர் கேரக்டர், போட்டோகிராபர் கேரக்டர் நன்றாக எழுதப்பட்டுள்ளது. நெகட்டிவ் கேரக்டரில் வரும் ஒருவர் அசத்தியுள்ள்ளார்.

படத்தில் பின்னணி இசையை மிகச்சரியாக கோர்த்திருக்கிறார் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி. படத்தில் ஒளிப்பதிவும் மிகத்தரமாக அமைந்துள்ளது. கச்சிதமான எடிட்டிங், கண்களை துருத்தாத கலை இயக்கம், தரமான வரைகலை என டெக்னிக்கலாக படம் அசுரப்பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது

முன்பாதியில் சற்று வேகமெடுக்க தாமதிக்கும் படம் அதன்பின் பரபரவென பறக்கிறது. மெயின் கேரக்டரின் எமோஷ்ன்லை நமக்குள் பொருத்திக் கொள்ள முடியாதது படத்தின் பெரிய மைனஸ். அந்த ஏரியாவை ரைட்டிங்கிலே சரி செய்திருக்கலாம். மேலும் விஜய் ஆண்டனி படத்தில் பெரியளவில் ஸ்மாட் ஆக எதுவும் செய்யவில்லை என்ற எண்ணமும் எழுகிறது. சின்னச் சின்னதாக பட்டி டிங்கரிங் செய்திருந்தால் மார்கன் மறக்க முடியாத படமாக மாறியிருக்கும்
2.75/5