நானி இணையும் தி பாரடைஸ்!

Get real time updates directly on you device, subscribe now.

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலாவின் கனவு படமான ‘ தி பாரடைஸ்’ படத்தின் படப்பிடிப்பில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி இணைந்திருக்கிறார். இந்த திரைப்படத்தை SLV சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த அதிரடி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெறுகிறது. ‘ தசரா’ படத்தின் அமோக வெற்றிக்குப் பிறகு ‘நேச்சுரல் ஸ்டார் ‘நானி- இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலாவின் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால்.. திரையுலகினர் உற்சாகமடைந்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் 21ஆம் தேதியன்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி இன்று படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இது படக்குழுவினருக்கு மேலும் உத்வேகத்தை அளித்திருக்கிறது.

Related Posts
1 of 3

கடந்த ஒரு வாரமாக இன்றியமையாத குழந்தை பருவ காட்சிகளை படக்குழுவினர் படமாக்கினர். தற்போது படக் குழுவினர் தங்களது கவனத்தை நானி பக்கம் திருப்பி உள்ளனர். அவரது வருகையை ‘தகாத் ஆகயா'” என ஜொலிக்கும் சொற்றொடரை பிரத்யேகமாக அறிவித்தனர். மேலும் இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டர்- கரடு முரடான பார்பெலுடன் நானி கதாபாத்திரத்தின் கால் மட்டும் தோற்றமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது சத்தமாகவும், தெளிவாகவும் உள்ளதாகவும், நானி இதற்கு முன் எப்போதும் நடித்திராத அளவிற்கு மூர்க்கமாக தோன்றுகிறார் என்பதையும் உறுதி செய்கிறது.