ம… புடுங்கவா இருக்கோம்? – விஷாலை கடுப்பேற்றிய தனுஷ்!

Get real time updates directly on you device, subscribe now.

ட வெளியீட்டை ஒழுங்குபடுத்த தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தது. வாரா வாராம் ரிலீசாகும் புதுப்படங்களுக்கு இந்தக் குழு தான் ரிலீஸ் தேதியை முடிவு செய்து கொடுக்கும்.

இதனால் சிறு முதலீட்டுப் படங்கள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ரிலீசாகிக் கொண்டிருந்தது. மேலும் இந்த புதிய முறையை தியேட்டர் உரிமையாளர்கள் கூட வரவேற்றனர்.

ஆனால் தான் தயாரித்து நடித்திருக்கும் ‘மாரி 2’ படத்தை டிசம்பர் 21-ம் தேதி ரிலீஸ் பண்ணியே தீருவேன் என்று தனுஷ் அடம் பிடித்ததால் இந்த திரைபப்ட ஒழுங்கீட்டுக் குழு கலைக்கப்பட்டு விட்டதாகத் தெரிகிறது.

Related Posts
1 of 101

இதுகுறித்து நேற்று தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் சங்கத்தின் விதியை யாரும் கடை பிடிக்க முன் வராதது போல பேசிக் கொண்டிருந்தனர். இதனால் கடுப்பான விஷால் ”ஆளாளுக்கு அவங்க இஷ்டத்துக்கு படத்தை ரிலீஸ் பண்றீங்க? அப்போ நாங்க சங்கத்துல என்ன ம… புடுங்கவா இருக்கோம்?” என்று கோபத்தோடு திட்டியபடி கிளம்பி விட்டாராம்.

இப்படி தயாரிப்பாளர் சங்கத்தை யாருமே மதிக்காத நிலையில் யார் வேண்டுமானாலும் எந்த தேதியில் வேண்டுமானாலும் படத்தை ரிலீஸ் செய்து கொள்ளலாம் என்கிற நிலை வந்திருப்பதால் டிசம்பர் 21 அன்று ‘மாரி2’ வுடன் ரிலீஸாக உள்ள ஜெயம் ரவியின் ‘அடங்க மறு’ சிவகார்த்திகேயனின் ‘கனா’, விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைக்குமா? என்று அதிர்ச்சியோடு விழி பிதுங்கி நிற்கின்றன.