சிவகார்த்திகேயன் நடிக்கும்”மாவீரன்”!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் “மாவீரன்” படத்தின் படப்பிடிப்பு நேற்று காலை சென்னையில் எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. மண்டேலா திரைப்பட புகழ் மடோனா அஸ்வின் எழுதி இயக்கும் இப்படத்தில் நடிகை அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் மற்றுமொரு படமான ‘பிரின்ஸ்’ படத்தின் இணை தயாரிப்பாளரான அருண் விஸ்வா Shanthi Talkies சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். திரைப்பட துவக்க விழாவில் இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் ஷங்கர் கலந்து கொண்டார்.