செல்ஃபி- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

ஒவ்வொரு தனிமனித வாழ்விலும் கல்வி என்பது இன்றிமையாத ஒன்று. ஆனால் இன்று அதை ஒரு சாமானியன் பெறுவதென்பது மிகப்பெரிய போராட்டமாக மாறிவிட்டது. அச்சடிக்கும் புத்தகத்தில் இருந்து, அதில் அச்சேறும் பாடங்கள் வரைக்கும் அரசியலும் வணிகமும் புகுந்து விட்டது கல்வியில். அதனால் கல்வி சார்ந்த படங்களில் எளியவர்களுக்கான அறம் பேசியிருந்தால் நிச்சயமாக அப்படத்தைப் பாராட்டியே ஆக வேண்டும். செல்ஃபி அப்படியான பாரட்டைப் பெறுகிறது

நாயகன் ஜிவி. பிரகாஷ் அப்பாவின் வற்புறுத்தலால் இன்ஜினியரீங் படிக்கிறார். படிப்புக்கும் வருமானத்திற்கும் காலேஜுக்குள் நடக்கும் கல்வி சார்ந்த ஒரு இல்லீகல் பிஸ்னெஸை கையில் எடுக்கிறார். அது அவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் பெரும் பிரச்சனைகளைக் கொடுக்க..அதில் இருந்து அவர் எப்படி மீண்டார்? என்பதே செல்ஃபியின் கதை

ஜிவி பிரகாஷுக்கு ஓரளவு பேர் சொல்லும் படம் இது. நடிப்பதற்கான ஸ்கோப் படத்தில் நிறையவே இருக்கிறது. நடித்துமிருக்கிறார். கெளதம்மெனன் அவரது வழக்கம் போலான உடல்மொழி மற்றும் டயலாக் டெலிவரியில் அசத்தியுள்ளார். சங்கலிமுருகன், அவரது மருமகன் கேரக்டரில் வருபவர், சுப்பிரமணியசிவா, உள்பட படத்தில் பல கேரக்டர்கள் கவனம் பெறுகிறார்கள். கேரக்டர்கள் வடிவமைப்பில் வெற்றிமாறனிடம் உள்ள நேர்த்தி அவரது சிஷ்யரான இப்படத்தின் இயக்குநர் மதிமாறனுக்கும் வாய்த்திருக்கிறது.

பின்னணி இசை பாடல்கள் இரண்டிலும் வழக்கம் போல ஜிவி ஹீரோயிசம் காட்டியிருக்கிறார். ஒளிப்பதிவில் பொல்லாதவன் டோன் தெரிகிறது. ஆனாலும் வசீகரிக்கிறது. எடிட்டிரின் ஷார்ப்பும் படத்தின் வேகத்திற்கு முக்கியமான காரணம்

முன்பாதியில் படத்தில் இருந்த ஸ்ட்ரக்சர் பின்பாதியில் பத்து நிமிடம் மிஸ் ஆகியிருந்தாலும் படம் நம்மை கவனச்சிதறலுக்கு கொண்டு போகவில்லை.. இன்றைய கல்வி வணிகமானதை வன்மையாக கண்டிப்பதோடு ஒரு தீர்வையும் சொல்லி இருப்பதால் செல்ஃபியை அனைவருக்கும் புடிக்கும்

3.5/5