குஷ்பு எனக்கு அக்கா மாதிரி, போதுமா..? : முத்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மாதவன்
சென்றவாரம் ரிலீசான ‘இறுதிச்சுற்று’ படம் மாதவனுக்கு தமிழில் ஹிட் ரீ-எண்ட்ரியாக அமைந்திருக்கிறது. எதிர்பார்த்ததை விட படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் மொத்த யூனிட்டும் சந்தோஷத்தில் திளைத்திருக்கிறது.
முன்னதாக இப்படத்தின் புரமோஷனுக்காக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சிம்ப்ளி குஷ்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாதவன் திடீரென்று நிகழ்ச்சியில் குஷ்புவுக்கு முத்தம் கொடுத்தார்.
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பி விட்ட நிலையில் அதற்கு தற்போது விளக்கம் கொடுத்திருக்கிறார் மாதவன்.
“நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா ஒரே துறைல வேலை செஞ்சோம்…. ஃப்ரண்ட்ஸ்… அப்படினெல்லாம் நான் சொல்ல மாட்டேன்… அவங்க என் அக்கா மாதிரி! அந்த எண்ணத்தோட தான் அவங்களுக்கு நான் முத்தம் கொடுத்தேன். இப்போ சொல்லுங்க நான் செஞ்சது சரியா தப்பா? என்றார் மாதவன்.
எம்ப்பா எல்லாத்தையுமே தப்பா எடுத்துக்கிறீங்க..?