ஜீவா படத்துக்கு ஆதரவு : களத்தில் இறங்கும் விஜய் ரசிகர்கள்!

‘புலி’ படம் ரிலீசான சமயத்தில் அஜித் ரசிகர்கள் உள்ளிட்டவர்கள் அந்தப்படத்துக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் எதிர்கருத்துகளை வெளியிட்டு படத்தின் வசூலுக்கு நெருக்கடியைக் கொடுத்தார்கள்.
அந்த நேரத்தில் நடிகர் ஜீவா ”’புலி’ படம் குழந்தைகளுக்கான படம்! விஜய் ரசிகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளுடனும், குடும்பத்தாருடனும் சேர்ந்து போய் ரசிக்க வேண்டிய படம்” என்று படத்துக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்தார்.
அவரின் இந்த ஆதரவு விஜய் ரசிகர்களுக்கு அந்த நேரத்தில் தெம்பைத் தந்த நிலையில் இப்போது அதற்கு கை மாறாக ஜீவாவின் ‘போக்கிரி ராஜா’ படத்துக்கு விஜய் ரசிகர்கள் முழுமையான ஆதரவைத் தர திட்டமிட்டிருக்கிறார்களாம்.
ஜீவா, சிபிராஜ் மற்றும் ஹன்சிகா மோத்வானி இணைந்து நடித்திருக்கும் இந்தப்படம் ஜீவாவிற்கு 25வது படம்! ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ புகழ் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ள இப்படத்தை புலி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பிடி. செல்வகுமார் தான் தனது பி.டி.எஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். இப்படத்தின் டீசர் இன்று பிப்ரவரி 1ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.
இதனால் ‘புலி’ படத்துக்கு ஆதரவளித்த ஜீவாவுக்கு அவருடைய 25 வது படமான ஆதரவளிக்கும் விதமாக ‘போக்கிரி ராஜா’ படத்தின் டீஸர் ரிலீஸ் முதல் பட ரிலீஸ் வரை ஒவ்வொன்றுக்கும் முழுமையாக ஆதரவு தர முடிவு செய்திருக்கிறார்களாம்.