மேதாவியாகும் அர்ஜூன் ஜீவா

Get real time updates directly on you device, subscribe now.

மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பில் சு.ராஜா தயாரிக்கும் படம் “மேதாவி”.

இன்று (மே 15) பிறந்த நாள் கொண்டாடும் தயாரிப்பாளர் சு.ராஜா, “மேதாவி” படத்தின் அறிவிப்பை வெளியிட்டதோடு, பெப்சி தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி அவர்களிடம் சினிமா பெப்சி தொழிலாளர்களுக்காக 5kg அரிசி 25,000 மூட்டைகளை (1,25,000 kgs) இன்று வழங்கி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.

தான் இயக்கும் ஒவ்வொரு படத்திலும் நேர்த்தியான கதையுடன் சமூக கருத்தையும் பதிவிடும் பிரபல பாடல் ஆசிரியரும் இயக்குனருமான பா.விஜய் இப்படத்தை இயக்குகிறார்.

Related Posts
1 of 5

ஹாரர் திரில்லராக உருவாகும் இப்படத்தில் “ஆக்சன் கிங்” அர்ஜூன் – ஜீவா முதன் முறையாக இணைந்து நடிக்கின்றனர். ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கின்றார்.

நகைச்சுவை நடிகர்களாக சாரா, “கைதி” தினா, ரோபோ ஷங்கரின் மகள் பிரியங்கா ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களோடு ராதாரவி, Y.G. மகேந்திரன், அழகம் பெருமாள், ரோகினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். தீபக் குமார் பாடி ஒளிப்பதிவு மேற்கொள்ள, சான்லோகேஸ் படத்தொகுப்பை செய்கிறார்.