படப்பிடிப்பில் மயங்கி விழுந்த ஹீரோயின்!

Get real time updates directly on you device, subscribe now.

madurai-1

‘நேற்று இன்று’, ‘இரவும் பகலும்’ உள்ளிட்ட படங்களை பெரியளவில் வெளியிட்ட நிறுவனம் எஸ்.தணிகைவேல் அவர்களின் RSSS PICTURES தற்போது ‘மதுரை மா வேந்தர்கள்’ என்ற படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது.

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் தன் மகளின் திருமணத்திற்காக வீட்டை விற்று வைத்திருந்த பணத்தை ஒரு அரசியல்வாதியிடம் கொடுத்து ஏமாந்து விடுகின்றார்கள். அந்த பணத்தை எப்படி கதாநாயகனும் அவனது நண்பர்களும் மீட்டெடுத்தார்கள் என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் படக்கியுள்ளார் இயக்குனர் வீ.கே விஜய் கண்ணா.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மே மாதம் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்த படத்தில் பாடல் காட்சி கோவளம் கடற்கரையில் உள்ள ஒரு சிறு மணல் தீவில் படமாக்கப்பட்டது. அந்த தீவை அடைவதற்கு படகில் செல்ல வேண்டும். அப்படி படகில் செல்லும் போது இயந்திர கோளாறு ஏற்பட்டு படகு நடுவில் தத்தளித்தது. அலையின் வேகத்துக்கு படகு கடலுக்குள் இழுத்துச்செல்ல படகில் இருந்த அனைவரும் பதற நாயகி மயங்கி விழுந்தார். அதன் பின் மீட்பு குழுவினர் வந்து படகை சரிசெய்து அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.