த்ரிஷாவின் நிறைவேறாத ஆசை? : கொஞ்சம் மனசு வையுங்க தலைவா…
வருண் மணியன் உடனான திருமணம் நிச்சயம் முடிந்த கையோடு நின்று போனதால் மீண்டும் படங்களில் நடிப்பதை வேகப்படுத்தியிருக்கிறார் த்ரிஷா.
சினிமாவுக்கு வந்து 13 வருடங்கள் ஆகியும் அவரது அழகில் மட்டும் இம்மிளவும் சேதாரமில்லை. கேட்டால் அது குடும்பத்துல இருந்து வந்த ஜூனாக இருக்கலாம் என்கிறார்.
இத்தனை வருடங்களில் தமிழ், தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களுடன் பலவித கேரக்டர்களில் நடித்து விட்ட த்ரிஷாவுக்கு இன்னும் ஒரே ஒரு கனவு மட்டும் பாக்கியிருக்கிறதாம்.
அது சினிமாவை விட்டு விலகுவதற்குள் நிறைவேறிவிட வேண்டும் என்பது தான் அவரது ஆசை.
கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்கள் எல்லோருடனும் சேர்ந்து நடித்து விட்ட த்ரிஷா இன்னும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மட்டும் எந்தப்படத்திலும் ஜோடி சேரவில்லை.
இது அவருக்கு மிகப்பெரிய மனக்குறையாகவே இருக்கிறது.
ஆமாம் சார், ரஜினி சார் கூட ஒரு படத்திலாவது சேர்ந்து நடிச்சிறணும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை. ஆனா அதுக்கான வாய்ப்பே அமையல. நீங்களாவது கொஞ்சம் அவர்கிட்ட சொல்லுங்களேன் என்கிறார் த்ரிஷா.
கொஞ்சம் மனசு வையுங்க தலைவா….