லவ்டுடே- விமர்சனம்
அன்றைய காதலர்களுக்கும் இன்றைய காதலர்களுக்கும் சேர்த்து, இன்றைய காதலின் நிலையை அழகாக உணர்த்தியுள்ள படம் லவ்டூடே
காதலர்களான ப்ரதீப் ரங்கநாதன், இவானா இருவரையும் தங்களது போன்களை மாத்தி யூஸ் பண்ணச் சொல்கிறார் இவானாவின் தந்தை சத்யராஜ். அட இதிலென்ன சிக்கல்? என கேள்வி எழுகிறதா? அதில் தான் எல்லாச் சிக்கலும் எழுகிறது. இவானாவின் ஷாட்லிஸ்டை ப்ரதீப் பார்த்து வெறியாக, ப்ரதீப்பின் ஷாட் லிஸ்டைப் பார்த்து இவானா காண்டாக, முடிவில் இவர்கள் காதல் என்னானது என்பதே படத்தின் கதை
ப்ரதீப் ரங்கநாதன் தனுஷை நகல் எடுத்தது போல நடித்தாலும், பெரிதாக நம்மை தொந்தரவு செய்யவில்லை. இவானா பாலா படத்தில் பாடம் படித்தவர் என்பதால் ஒவ்வொரு காட்சியிலும் தன் இருப்பை அழகாகப் பதிவு செய்துள்ளார். ஆச்சர்யம் கொடுத்த கேரக்டர் யோகிபாவுவின் கேரக்டர். சத்யராஜ் அதிகம் பேசாமல் அவரைப் பேச வைக்கிறார். ராதிகா சரத்குமார் தன் அனுபவத்திற்கான நடிப்பைக் கொடுத்து அழகாக கவர்கிறார்
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் இன்றைய ட்ரெண்டில் நின்று விளையாடுகிறது. தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு தேவையற்ற ஷாட் ஒன்றை கூட பதிவுசெய்யவில்லை. தேவையான ஷாட்ஸ் எல்லாவற்றையும் அழகாக தந்துள்ளது
எல்லாரோரின் பிரைவசியிலும் சின்னச் சின்னப் பலவீனங்கள் இருக்கும் தான். இன்றைய இணைய உலகில் அது தவிர்க்க முடியாதது. அதை நமது நம்பிக்கையாலும் அன்பாலும் கடந்து வரவேண்டும் என்ற மெசேஜை படம் பக்காவாகச் சொல்லியுள்ளது. இறுதிவரை படத்தின் திரைக்கதை நம்மை எங்கேஜிங்காக வைத்துள்ளது படத்தை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
3.5/5
#Lovetoday #லவ்டுடே