வெற்றியுடன் வீர நடை போடும் ” மகா சேனா”!

மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில், நடிகர் விமலின் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் உருவான மகா சேனா திரைப்படம் 12.12.2025 அன்று உலகெங்கும் வெளியானது. இயற்கையையும் தெய்வத்தையும் வணங்கும் ஒரு மனித குலம், அதை அழிக்க நினைக்கும் இன்னொரு கூட்டம் என்று ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் காடு சார்ந்த ஆக்சன் திரில்லர் படமான மகாசேனா திரைப்படம், திரையிட்ட திரையரங்குகளி லெல்லாம் குடும்பங்களின் பேராதரவுடன் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 264 திரையரங்குகளில் மகா சேனா திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நடிகர் விமல் நடித்து வெளியான ஒரு படம், இத்தனை திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல் முறை.
மேலும் குலதெய்வ வழிபாடு, சமத்துவம், மனிதம் ஆகிய பல கருத்துக்களை முனைப்பில் வைத்து திரைக்கதையாக தொடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு ஸ்ருஸ்டி டாங்கே, யோகி பாபு, ஜான் விஜய் உட்பட அனைத்து நடிகர்களும் மிகப்பெரிய உயிரோட்டத்தை கொடுத்துள்ளனர். குலதெய்வ வழிபாடு எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தி சொல்லும் இந்தக் கதையின் அடி நாதத்தை, படம் பார்க்க வரும் குடும்பத்தினரும் குறிப்பாக பெண்களும் கொண்டாடித் தீர்க்ககின்றனர்.
ஆக மொத்தத்தில் மகா சேனா திரைப்படம் மக்களின் பேராதரவுடன் மகத்தான வெற்றியுடன் வீர நடை போட்டுக் கொண்டிருக்கிறது.