கல்லூரி மாணவர்களுக்காக கமல் விட்டுக் கொடுத்த ‘மய்யம்’

Get real time updates directly on you device, subscribe now.

maiem---news-4

சினிமா சூட்டிங்கையே பார்த்திராத கல்லூரி மாணவர்களின் திரைப்பட ஏக்கத்துக்கு முதல் படத்திலேயே களம் அமைத்துக் கொடுத்திருக்கிறார் ‘ஆர்ட்டிஸ்ட்’ ஸ்ரீதர்!

கமல் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களை தனது தூரிகையால் அழகாக்குவதில் கை தேர்ந்தவரான ‘ஆர்ட்டிஸ்ட்’ ஸ்ரீதர் முதல் முறையாக ஒரு படத்தை தயாரித்திருக்கிறார். ஸ்கெட்ஸ்புக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அவர் தயாரித்திருக்கும் படத்தின் பெயர் ‘மய்யம்’. இதில் இடம்பெற்றிருக்கும் இயக்குநர் ஆதித்யாபாஸ்கரன் முதல்  டான்ஸ் மாஸ்டர் அவ்லின் வரை எல்லோருமே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள்.

‘மய்யம்’ என்றதும் நம் எல்லோர் நினைவுக்கும் வருவது ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தன் ரசிகர்களுக்காக நடத்தி வரும் இதழின் பெயர் தான். அந்தப் பெயரையே தனது படத்துக்கு டைட்டிலாக வைத்திருக்கும் ஸ்ரீதரிடம் எப்படி இந்த டைட்டிலை கமல் சார்கிட்ட வாங்கினீங்க? என்கிற கேள்வியை முன் வைத்தோம்.

”கமல்சார் கிட்ட போய்க் கேட்டேன். கேட்டவுடனே ஓகே பயன்படுத்திக்கங்கன்னு சொல்லிட்டார். அவரோட ஆசீர்வாதத்தோட தான் இந்தப்படத்தை ஆரம்பிச்சேன்” என்றார் உற்சாகமாக…

காதல், நகைச்சுவை, திகில் என மூன்று கலவைகளில் படமும் அப்படித்தான் இருக்கும்.

maiem-news2

இந்தியாவுல இருக்கிற எல்லா பேங்க் ஏ.டி.எம்ங்களில் நடக்குற கொலைகளைப் பத்திப் பேசுற படம் இது. ஏ.டி.எம்ல பணம் எடுக்க வர்றவங்களை குறிவெச்சுக் கொல்லப்படுறாங்க… அந்த மாதிரியான கொலைகள் இதுவரைக்கும் 6,000க்கும் மேல நடந்திருக்கு. அது ஏன் நடந்தது? அதோட பின்னணி என்ன? மக்களை பாதுகாக்க பேங்க்குகள் என்ன செய்யணும்கிறதை படத்துல  சொல்றேன். சமீபத்துல நடந்த ஒரு பேங்க் கொலை நிஜ சம்பவத்தை தான் இந்தப் படத்துல கதையாக்கி இருக்கேன். ரொம்ப நல்லா வந்திருக்கு என்றார்.

அதெப்படி கல்லூரி மாணவர்களை ஒரே படத்துல இணைக்கிற ஐடியா வந்துச்சு? கேட்டபோது ”இந்த பசங்க எல்லாருமே சேர்ந்து அப்பப்போ குறும்படங்கள் எடுப்பாங்க. எல்லாருமே ரொம்ப டேலண்ட்டான பசங்க. அவங்க எடுத்த குறும்படங்களைப் பார்த்தப்பத்தான் இவங்க எல்லாரையும் சினிமாவுல அறிமுகப்படுத்தினா என்னன்னு தோணுச்சு. சும்மா சொல்லக்கூடாது நான் எதிர்ப்பார்த்ததுக்கு மேலேயே படத்தை ரொம்ப சிறப்பா எடுத்துக் கொடுத்திருக்காங்க” என்றவரின் பேச்சு ரோபோ சங்கரைப் பத்தி திரும்பிச்சு.

இந்தப் படத்துல ரோபோ சங்கர் ஒரு முக்கியமான கேரக்டர்ல நடிக்கிறார். இதுவரைக்கும் அவர் நடிச்ச படங்கள்லேயே இந்தப் படத்துல படத்துல முக்கால்வாசி வருவார். வழக்கமா நாலைஞ்சு பேர் கூட சேர்ந்து காமெடி பண்ற அவரை இதுல ஒரே ஒரு ரூமுக்குள்ள போட்டு அடைச்சிட்டோம். அதுல அவர் மட்டும் தான் சுவரைப் பாத்து டயலாக் பேசணும். ஷூட்டிங் ஆரம்பிச்ச ரெண்டே நாள்ல என்னப்பா என்னை இப்படி தனியா பொழம்ப வெச்சுட்டீங்களே..ன்னு சொன்னவர் அவரோட கேரக்டரோட முக்கியத்துவத்தைப் பார்த்து சந்தோஷப்பட்டார்.

என்றவர் ஒரு படம் ரிலீசான முதல்நாள் முதல் ஷோவுலேயே படத்தைப் பத்தி ட்விட்டர்ல விமர்சனம் பண்றவங்களை ஒரு பிடி பிடித்திருக்கி்றார்.

”ஆமாம் சார், ஒரு படம் ரிலீசான அன்னைக்கு முதல் ஷோவுலேயே தப்பா விமர்சனம் பண்றதெல்லாம் ரொம்ப ஓவர். அவங்களுக்காகவே படத்துல ஒரு சீனை வெச்சிருக்கோம். அதைப் பார்த்தாவது அந்தக் கும்பல் திருந்துதான்னு பார்ப்போம்” என்றார்.

சொன்னாக் கேட்டு திருந்துற கூட்டமா அது..?