தயாரிப்பாளர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கும் மிஸ்கின்!

Get real time updates directly on you device, subscribe now.

mysskin

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கிய மிஷ்கின் தற்போது விஷால் கதாநாயகனாக நடிக்கும் ”துப்பறிவாளன்” படத்தை இயக்கி வருகிறார்.

முன்னணி ஹீரோக்களிடம் கால்ஷீட் வாங்கி அவர்களுடைய சம்பளத்தையும், படத்தின் பட்ஜெட்டையும் தாங்கக்கூடிய பட நிறுவனங்களில் படம் இயக்க ஆரம்பித்த மிஸ்கின் ஜீவாவை வைத்து இயக்கிய முகமூடி சரியாகப் போகாததால் கடந்த சில படங்களாக புதுமுக ஹீரோக்களை மட்டுமே நம்பி படங்கள் இயக்க ஆரம்பித்திருக்கிறார்.

முந்தைய படமான ‘பிசாசு’ படத்தைத் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட படத்திற்கு பண முதலீடு செய்தவரும் பிரபல தயாரிப்பாளருமான ரகு நந்தன் என்பவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கியிருக்கிறார் மிஸ்கின். ஆமாம் இவருடைய மகன் மைத்ரேயா என்பவரைத் தான் தனது இந்த புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார் மிஸ்கின்.

Related Posts
1 of 6

லண்டனில் எம்.பி.ஏ பட்டம் படித்து விட்டு மும்பையில் உள்ள நடிப்பு கல்லூரியில் நடிப்பு பயின்று, சினிமாவிற்கு தேவையான அனைத்து பயிற்சிகளையும் கடந்த 2 வருடமாக முறையே கற்றுள்ளாராம் இந்த ஆத்ரேயா. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் பிரபல முன்னாள் கதாநாயகனும் குணசித்திர நடிகருமான ரவிசந்திரனின் பேத்தி தானியா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

கதாநாயகன் மைத்ரேயா தயாரிப்பாளர் ரகு நந்தன் அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால் நடிப்பில் உருவாகிவரும் ”துப்பறிவாளன்” படம் முடிந்தவுடன் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் வேலைகள் முழு வீச்சில் துவங்கப்படும்.