முத்தம் கொடு! : மனிஷாவை துரத்தும் இயக்குநர்கள்
40, 50 கோடிகளில் எடுக்கப்பட்ட படங்கள் எல்லாம் போட்ட முதலீட்டை எடுக்க திக்கிக் திணறுகிறது.
ஆனால் வெறும் 3 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட த்ரிஷா ‘இல்லன்னா நயன்தாரா’ படம் ரிலீசான ஒரே வாரத்தில் 13 கோடி ரூபாயை வசூல் செய்திருக்கிறது.
இளைஞர்களை குறிவைத்து எடுக்கப்பட்ட அந்தப் படத்தின் இந்தளவு ஓட்டத்துக்கு முக்கிய காரணமே படத்தின் நாயகிகள் ஆனந்தி மற்றும் மனிஷா யாதவ்வின் ‘தாராளம்’ தான்.
அதிலும் ஆனந்தியை விட மனிஷா தான் ஜிவியுடன் அதிகம் நெருக்கமாகி ரொமான்ஸ் காட்சிகளில் ‘லிப் டூ லிப்’ கிஸ்செல்லாம் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
படம் வசூலை வாரிக்கொண்டிருந்தாலும் மனிஷாவைத் தேடி வரும் புதுப்பட வாய்ப்புகள் என்னவோ அவரை மனச்சங்கடத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
கதை சொல்ல வருகிற இயக்குநர்கள் எல்லோரும் ”படத்துல ஒரு முத்தக்காட்சி இருக்கிறது” என்று சொன்னால் பரவாயில்லை. ”நாலைஞ்சு லிப் டூ லிப் கிஸ் சீன்ஸ் இருக்கு, எல்லாமே படத்துல முக்கியமான காட்சிகள்ல வருது” என்று படம் முழுக்க ஆங்காங்கே பிட்டு பிட்டாக கிஸ் கொடுக்கும் காட்சிகளை வைத்திருக்கிறார்களாம்.
என்னடா நம்ம இமேஜ் இவ்ளோ கிழிஞ்சி தொங்குதே… என்று மனச் சங்கடத்தில் இருக்கிறார் மனிஷா.
முடிவு பண்ணிட்டாங்கள்ல… ‘இனிமே இப்படித்தான்’ மனிஷா!