‘நண்பேன்டா’ சிவகார்த்திகேயன் : சிலாகித்த ‘மாப்ளே சிங்கம்’ விமல்

யதார்த்தமான நடிப்புக்கு சொந்தக்காரரான விமலுக்கு ஒரு ப்ளாக்பஸ்டர் ஹிட் வந்தே ஆக வேண்டும்.
‘மஞ்சப்பை’ படத்துக்குப் பிறகு வந்த சில படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை, என்றாலும் வரும் 11-ம் தேதி ரிலீசாகப் போகும் ‘மாப்ளே சிங்கம்’ அந்த தோல்விகளுக்கும் சேர்த்து பிரம்மாண்ட வெற்றியை அறுவடை செய்யும் என்று தெரிகிறது.
அதற்கு எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனமும் முக்கிய காரணம். தயாரிப்பாக இருந்தாலும் சரி, விநியோகமாக இருந்தாலும் சரி ரசிகர்களின் ரசனைக்கேற்ற படங்களை தந்து தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பி.மதன் தான் இப்படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
விமல், அஞ்சலி, சூரி, காளி வெங்கட், சுவாமிநாதன் மற்றும் பலர் நடிப்பில் ராஜசேகர் இயக்கியுள்ளார். என். ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் பிரமோஷனுக்காக ‘எதுக்கு மச்சான் காதலு…’ என்ற பாடலை நடிகர் சிவகார்த்திகேயனும், இசையமைப்பாளர் அனிருத்தும் இணைந்து பாடிக்கொடுத்த நிகழ்வு நடந்தது. அதைப்பற்றி விமலிடம் கேட்டால் மனம் திறந்து பேசுகிறார்…
அவர் என்னோட சக ஹீரோ. அது மட்டுமில்லாமல் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடியே நாங்க ரெண்டு பேரும் நல்ல திக் ப்ரெண்ட்ஸ். அதோட ”கேடி பில்லா கில்லாடி ரங்கா” படத்துல நாங்க சேர்ந்து நடிச்சோம். இப்போதும் அவர்கூட எனக்கு நல்ல ப்ரெண்ஷிப் இருக்கு.
அதனால இந்தப் படத்துல அவரோட வாய்ஸ்ல ஒரு பாடலைப் பாடணும்னு கேட்ட உடனே ஓ.கே சொல்லி பாடிக்கொடுத்துட்டு போனார்” என்றார்.
டைட்டில்ல இருக்கிற கெத்து தான் படத்துல விமலோட கேரக்டர்லேயும் இருக்கும் என்றார் இயக்குநர் ராஜசேகர். ‘களவாணி’ படத்துல அரிக்கியா ஒரு சாதாரண இளைஞராக வந்த விமலை இந்தப்படத்துல டோட்டலா மாத்தியிருக்கேன். இதுல அவர் செம கெத்தா வருவார். அதனால தான் படத்தோட போஸ்டர்களிலேயே அந்த கெத்து தெரியும் என்றவரிடம் அதே போஸ்டர்களில் தெரிந்த இன்னொரு விஷயத்தையும் கேட்டோம்.
அதே போஸ்டர்களில் ”வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படத்தின் சாயலும் தெரிகிறதே? என்று கேட்டபோது ”உண்மை தான். ஏன்னா அந்த படத்தோட டிசைனர் தான் இந்தப் படத்துக்கும் டிசைன் பண்ணினார். ஆனால் இந்த படத்துல அந்தப் படத்தோட சாயல் சுத்தமா தெரியாது என்றவரிடம் இது எந்த மாதிரியான படம் என்றோம்.
ஒரு ஜாலியான காமெடிப்படமா இருக்கும். விமல் ஒரு அரசியல்வாதி பின்னணி உள்ளவர், அஞ்சலி ஒரு வக்கீல் இரண்டு பேரும் ஒரே பிரச்சனைக்காக சேர்ந்து போராடுறாங்க. அதுல அவங்க நட்பு, காதல் என்று போகும் என்றார்.
தூங்கா நகரம், கலகலப்பு படத்துக்குப் பிறகு மூன்றாவது முறையாக இதில் விமலுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் அஞ்சலி.
விமல் என்னோட நல்ல நண்பர். ஏற்கனவே இரண்டு படங்கள்ல சேர்ந்து நடிச்சதுனால இதுல நடிக்கிறப்போ எந்த சங்கடமும் இல்லை. கேரக்டரோட ஒன்றி நடிக்கிறது ரொம்ப ஈஸியா இருந்துச்சு என்ற அஞ்சலி இந்தப்படத்துக்காக 7 கிலோ வரை உடல் எடையைக் குறைத்திருக்கிறாராம்.
வழக்கம் போல விமலுடன் சூரி மட்டுமில்லாமல் காளி வெங்கட் சுவாமிநாதன் ஆகியோரும் படத்தின் காமெடிக்கு கேரண்டி தருகிறார்கள்.
அப்போ வெற்றியும் கேரண்டி தான்!