”ஒரு ஆம்பளையோடு நடித்திருக்கிறேன்” – வரலட்சுமியை கலாய்த்த விமல்!

Get real time updates directly on you device, subscribe now.

‘களவாணி 2′ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விமல் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் படம் ‘கன்னி ராசி’.

இதில் விமலுக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் ஷமீம் இப்ராகிம், இயக்குனர் எஸ்.முத்துக்குமரன், நடிகர் விமல், நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் எஸ்.செல்வகுமார், பாடலாசிரியர் யுகபாரதி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Related Posts
1 of 151

நிகழ்ச்சியில் நடிகர் விமல் பேசியதாவது, ”இந்தப்படம் மிக அருமையாக வந்திருக்கு. யோகிபாபு, ரோபோசங்கர், காளிவெங்கட் எல்லோர் கூடவும் எனக்கு காம்பினேஷன் சீன்ஸ் இருக்கு. அதனால படம் ரொம்ப ஜாலியாக இருக்கும்.

இயக்குநர் முத்துக்குமரன் எப்போதும் பத்து பெண்களோடு தான் இருப்பார். அதனால் அவர் அடுத்த வருடம் கண்டிப்பாக கல்யாணம் செய்து விடுவார். மேலும் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறேன்.

பல படங்களில் பல கதாநாயகிகளுடன் நடித்துள்ளேன். ஆனால், இந்த படத்தில் முதல் முறையாக ஒரு ஆம்பளயோட நடித்திருக்கிறேன்” என்று வரலட்சுமியை பற்றி கலகலப்பாக கூறினார்.