மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

வரலாற்றுப் படங்களை ரசிகர்கள் விரும்பக்காரணம் அதில் இருக்கும் பிரம்மாண்டம் தான். ஆனால் அந்தப்பிரம்மாண்டத்துக்குப் பின்னணியில் நல்ல கதையும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ரசிகர்களிடம் அப்படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.

சரி மரைக்காயர் என்ன சொல்றார்?

கேரளத்தை ஆளும் சாமுத்திரி மன்னர் பரங்கியர்களை அழிக்க கடல்கொள்ளையான குஞ்ஞாலியை துணைக்கு அழைக்கிறார். குஞ்ஞாலி முதல்கட்டப்போருக்கு வெற்றியை ஈட்டித்தர மன்னரும் மக்களும் ஹேப்பி. ஆனால் அடுத்து ஒரு காதல் சம்பவத்தால் குஞ்ஞாலி குருப்பிற்கும் மன்னர் குருப்பிற்குமே பகை மூள…அடுத்து என்ன என்பதே மரைக்காயர் கதை

குஞ்ஞாலியாக நாயகன் மோகன்லால். பிரியதர்சன் நடிக்க அழைத்தால் கதையே கேட்கமாட்டாராம் மோகன்லால். இதை சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரியதர்சன் சொல்லிருந்தார். இப்படி அர்ப்பணிப்போடு படத்திற்குள் வரும் நல்ல நடிகரை இப்படியா வேஸ்ட் செய்வது. துளி அளவு கூட குஞ்ஞாலியாக வரும் மோகன்லால் கேரக்டர் அதிர்வுகளை ஏற்படுத்தவே இல்லை. வாள் சண்டையிலும் எமோஷ்னல் காட்சிகளிலும் மோகன்லால் கலக்கினாலும் நமக்கு எந்த Feeling உம் வரமாட்டேன்கிறது. அர்ஜுன், பிரபு அசோக்செல்வன், மறைந்த நெடுமுடிவேணு என திரையெங்கும் நட்சத்திரங்கள். இவர்களில் கீர்த்தி சுரேஷும் ஒரு சைனா வீரனும் மட்டுமே செமத்தியாக ஸ்கோர் செய்கிறார்கள்

காட்சிகளில் இருக்கும் பிரம்மாண்டம், விஷுவலில் இருக்கும் உலகத்தரம் என டெக்னிக்கலாக எல்லாமே மிரட்டல். அதே மிரட்டல் கதையிலும் இருந்திருந்தால் மலையாளத்தில் ஓர் பாகுபலி என மரைக்காயரை மனமுவந்து பாராட்டி இருக்கலாம்

2/5