மாமன்னன்- விமர்சனம்

மாரி செல்வராஜின் மற்றொரு பொலிட்டிகல் சாட்டை!
சேலம் மாவட்டம் காசிபுரத்தின் எம்.எல்.ஏ வடிவேலு. அவர் எம்.எல்.ஏவாக இருக்கும் அதே கட்சியின் மாவட்டச் செயலாளர் பஹத்பாசில். வடிவேலுவை தன் முன்னால் உட்கார கூட விடாமல் வைத்துக்கொண்ட பஹத்தின் சாதி அதிகாரம் எப்படி ஹீரோ உதயநிதியால் அடங்குகிறது என்பதே படத்தின் கதை!
நிச்சயமாக இப்படத்தின் மாமன்னன் வடிவேலு தான். நாம் நினைத்திராத ஒரு பாத்திரத்தில் நடித்து, அக்கதாப்பாத்திரத்தை நிறைத்துக் கொடுத்துள்ளார். உதயநிதிக்கு இது அவர் கரியரில் கடைசி படம் என்பதால் பார்த்துப் பார்த்து நடித்துள்ளார். நிச்சயமாக அவருக்கும் பாஸ்மார்க் தான். கீர்த்தி சுரேஷின் கேரக்டர் மிக வீக்-ஆகத்தான் அமைக்கப்பட்டுள்ளது. அவரது நடிப்பிலும் பெரிய அதிர்வு ஏதுமில்லை. பஹத் பாசில் தனக்கு வழங்கப்பட்ட கேரக்டரை உள்வாங்கி அமர்க்களமாக நடித்துள்ளார்.
தன் மேதமை நிறைந்த ஞானத்தால் கதையின் சாராம்சத்தை உள்வாங்கி இசை அமைத்துள்ளார் ஏ.ஆர் ரகுமான். தேனி ஈஸ்வரரின் ஒளிப்பதிவில் சேலத்தின் நிலப்பரப்பு கண்முன் விரிகிறது. அழகான விஷுவல்ஸ்!
முன்பாதியில்
மாரி செல்வராஜ் தனக்கே உரிய எளிமையோடு கதையை அழகாக நகர்த்துகிறார். வாவ் மொமெண்ட்ஸ் குறைவாக இருந்தாலும் முன்பாதி படம் நிறைவாகவே அமைந்துள்ளது. பின்பாதியில் படம் பேசியுள்ள கருத்தியல் சரியாக இருந்தாலும் அதிகமான கமர்சியலுக்குள் படம் சிக்கிக்கொள்கிறது. இன்னும் வீரியமாக பதிந்திருக்க வேண்டிய படம்! அதே சமயம் நம் அனைவரும் ஆதரிக்க வேண்டிய சமூகநீதி படம் என்பதிலும் மாற்றமில்லை
3.5/5
#maamannan #மாமன்னன்