மாஸ்டர் தியேட்டரில் தான் வரும்- தயாரிப்பாளர் உறுதி
பொன்மகள் வந்தாள் படம் அமேசானில் வெளியாக இருப்பதைக் குறித்து திரைத்துறையில் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன. குறிப்பாக இனி எல்லாப்படங்களும் ஆன்லைனில் தான் வரும் என்று பலர் தியேட்டர்காரர்களைப் பதற வைக்கிறார்கள்.
இந்நிலையில் மாஸ்டர் படமும் ஆன்லைனில் வெளியாக வாய்ப்புள்ளது என்று பல இணையவாசிகள் கொளுத்திப் போட கொந்தளித்து விட்டது தியேட்டர் தரப்பு. அதை தணிக்கும் விதமாக மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார், “படம் இணையத்தில் வெளியாகும் என்பது வதந்தி. மாஸ்டர் நிச்சயம் திரையரங்குகளில் தான் வெளியாகும்” என்றார்