அம்மா, அண்ணி, அக்கா – மீராஜாஸ்மினோட லெவல் இம்புட்டுத்தான்…
காதல், திருமணம் போன்ற சர்ச்சைகளால் பட வாய்ப்புகளை குறைத்துக் கொண்டவர் மீரா ஜாஸ்மின்.
பிறகு ஒருவழியாக துபாய் இன்ஜினியர் அனில் ஜான் என்பவரை திருமணம் செய்துகொண்டதோடு அவரை சுற்றி வந்த சர்ச்சைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.
இதனால் மீண்டும் படங்களில் நடிக்கத் தயாராக இருந்தும் பட வாய்ப்புகள் இல்லை. அதோடு பல இளம் நடிகைகளின் வரத்தால் மீராஜாஸ்மினை யாரும் சீண்டவில்லை.
தனக்குத் தெரிந்த இயக்குநர்களிடம் சான்ஸ் கேட்டுப் பார்த்தும் அவர்கள் மீராவுக்கு அம்மா, அக்கா, அண்ணி கேரக்டர்கள் மட்டுமே தருவதாக சொன்னார்கள்.
இதனால் அந்த மாதிரியான கேரக்டர்களை மறுத்து வந்த மீரா தற்போது தன் நிலையை மாற்றிக்கொள்ள முடிவு செய்திருக்கிறார்.
அந்த நல்ல முடிவுக்கு பலனாக மலையாளத்தில் இது நும்மபுரம் என்கிற படத்தில் மூன்று குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கிறார்.