” மேல் நாட்டு மருமகன் ” படத்துக்காக 33 நிமிடத்தில் பாட்டெழுதித் தந்த நா.முத்துக்குமார்!

Get real time updates directly on you device, subscribe now.

mel

தயா கிரியேஷன் என்ற பட நிறுவனம் சார்பில் மனோ உதயகுமார் தயாரிக்கும் படம் “ மேல் நாட்டு மருமகன் “ இந்த படத்தில் ராஜ்கமல் நாயகனாக நடிக்கிறார். பிரான்சில் இருந்து ஆண்ட்ரீயன் என்னும் வெள்ளைக்கார பெண் நாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் வி.எஸ்.ராகவன், அஞ்சலிதேவி, அசோகராஜ், சாத்தையா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – கே.கெளதம் கிருஷ்ணா

இசை – வே.கிஷோர் குமார்

படத்தொகுப்பு – விஜய் கீர்த்தி ( இவர் பிரபல எடிட்டர் ராஜ்கீர்த்தியின் மகன் ஆவார்)

கலை – ராம் , நடனம் – சங்கர்

பாடல்கள் – நா.முத்துக்குமார், நாஞ்சில் ராஜன், ஆக்காட்டி ஆறுமுகம், எம்.எஸ்.எஸ்.

தயாரிப்பு நிர்வாகம் – ஆனந்த்

தயாரிப்பு – மனோ உதயகுமார்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எம்.எஸ்.எஸ்

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்..

“மேல்நாட்டு மருமகன் “செக்ஸ் வன்முறை, என்று இல்லாத குடும்பத்தினருடன் பார்க்க வேண்டிய படம்.
ராஜ்கமல் – ஆண்ட் ரியன் காதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்கள். எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய கலைஞனை இழந்து விட்டு நிற்கிறோம். இந்த படத்திற்காக நா.முத்துக்குமார் அவர்களிடம் ஒரு பாடல் எழுத கேட்டேன்..

அதற்கு அவர் முதலில் அமெரிக்கா போகிறேன் வந்து எழுதுகிறேன் . அவசரம்னா வேறை யாரையாவது எழுதி தரச்சொல்லி வாங்கிக்குங்க பிளீஸ் என்றார். நீங்கதான் எழுதனும்னு வற்புறுத்தினேன். நிலைமையை புரிந்த அவர் . அவரது காரில் என்னை அழைத்துச் சென்று 33 நிமிடத்தில் பாட்டெழுதி கொடுத்து விட்டார் .

ஓடும் காரிலேயே பாட்டெழுதித் தந்த அந்த நடப்பையும், நண்பனையும் இழந்து நிற்கிறது இந்த படக்குழு.

“யாரோ யார் இவளோ “

சந்தோஷத்தின் பேர் இவளா “

என்று அருவியாய் வந்த அவரது எழுத்தாற்றல் மிகப்பெரியது.

அது மட்டுமல்ல படத்தில் மற்ற பாடலாசிரியர்கள் எழுதிய பாடல்களை கேட்டு, அவர்கள் புதியவர்கள் என்பதையும் அறிந்து மனதார பாராட்டிய அந்த பெருந்தன்மைக்கு இந்த படக்குழு நன்றி சொல்லிக் கொள்கிறது என்றார் இயக்குனர் .எம்.எஸ்.எஸ்.