தீபாவளி கொண்டாட்டம் : தல – தளபதி ஆட்டம் ஆரம்பம்!

கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக பொங்கல், தீபாவளி உள்ளிட்ட முக்கியமான பண்டிகை தினங்களில் விஜய் – அஜித் படங்கள் நேரடியாக மோதி வருகின்றன.
ஒருவேளை படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டாலும் டீஸரோ, அல்லது ட்ரெய்லரோ சம்பந்தப்பட்ட பண்டிகை தினங்களில் வெளியாகி ஒரு பரபரப்பை ஏற்படுத்தும்.
அப்படி ஒரு பரபரப்பு இந்த ஆண்டு தீபாவளிக்கும் இருக்கும் என்பது தான் லேட்டஸ்ட் தகவல்.
விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் நடிப்பில் ‘விஜய் 60’ படத்தை இயக்கி வருகிறார் பரதன். இப்படத்தின் படப்பிடிப்பு 75 சதவீதம் முடிந்து விட்டது.
அதேபோல தல அஜித்தை வைத்து ‘தல 57’ படத்தை இயக்கி வருகிறார் சிறுத்தை சிவா.
இந்த படத்தில் அஜீத்தின் மனைவியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் அஜீத்தின் பார்ட்னராக நடிக்கிறார்.
இரண்டு படங்களுமே பொங்கலுக்குத்தான் ரிலீஸ் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரசிகர்களை குஷிபடுத்த இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் முடிவெடுத்திருக்கிறார்கள்.
ஆமாம் இரண்டு படங்களுமே இந்த தீபாவளிக்கு ரிலீஸாக வாய்ப்பு இல்லாத நிலையில் தல, தளபதி படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் டைட்டில் ஆகியவை மட்டும் தீபாவளிக்கு வெளியிடலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்களாம்.
காத்து வாக்கில் வந்த இந்தச் செய்தி எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
ஒருவேளை அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் தல – தளபதி ரசிகர்களுக்கு அது உச்சபச்ச கொண்டாட்டமாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.