250 கோடி வசூல் செய்தும் பிரயோஜனம் இல்லை! – தயாரிப்பாளரை கதற விட்ட அட்லீ!

Get real time updates directly on you device, subscribe now.

சென்ற 2017ம் ஆண்டு ரிலீசான படங்களில் 250 கோடியை வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் சாதனை படைத்த படம் விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’.

அட்லீ இயக்கியிருந்த இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் சுமார் 130 கோடி ரூபாயில் மிகப்பிரம்மாண்டப் படமாக தயாரித்திருந்தது.

இந்தப் படம் வாங்கிய விநியோகஸ்தர்களுக்கும், திரையிட்ட தியேட்டர் உரிமையாளர்களுக்கும் பெரிய லாபத்தை கொடுத்த படம் என்று பலரும் பாராட்டினர்.
ஆனால் தயாரித்த விதத்தில் அப்படத்தின் தயாரிப்பாளருக்கு எந்தவித லாபமும் இல்லை என்று கூறியிருக்கிறார்கள்.

இதனாலேயே மெர்சல் படத்திலிருந்து கிடைக்கும் பணத்தை வைத்து சங்கமித்ரா உட்பட அடுத்தடுத்து புதுப்படங்களை தயாரிக்க திட்டமிட்டிருந்த ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தற்போது நிதி நெருக்கடியில் சிக்கி எல்லாப் படங்களையும் ட்ராப் செய்து விட்டதாம்.

Related Posts
1 of 84

இந்த நிலையில், ”இயக்குனர் அட்லீக்கு தயாரிப்பாளர்கள் யாரும் பட வாய்ப்பு தரக்கூடாது, ஹீரோக்கள் தேதி தரக்கூடாது” என்று வெளிப்படையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா.

அதன்படி பார்த்தால் ‘மெர்சல்’ படம் பாக்ஸ் ஆபீசில் சாதனை படைத்தாலும் தயாரிப்பாளருக்கு எந்தவித பலனும் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிய வந்திருக்கிறது என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்!

தயாரிப்பாளர்களை நிம்மதியா வாழவே விட மாட்டீங்களாப்பா?