ஆர்யாவின் ‘ப்ளேபாய்’ இமேஜுக்கு முடிவு கட்டிய இயக்குனர்
கோலிவுட்டின் ‘ப்ளேபாய்’ யார் என்றால் பார்த்திபன் முதல் விஷால் வரை எல்லோருமே நடிகர் ஆர்யாவைத்தான் கை காட்டுவார்கள்.
தான் நடிக்கும் படங்களில் கூட நடிக்கும் நடிகைகளிடம் அன்பொழுகப் பேசி நட்பை உண்டாக்கி அவர்களை தனது பிரியாணி கடைக்கு கூட்டிச்சென்று நட்பை வளர்ப்பார்.
ஆர்யாவின் இந்த ஹீரோயின்கள் நெருக்கத்தைப் பார்த்து பொறாமைப்படும் சக இளம் ஹீரோக்கள் பல திரையுலக விழா மேடைகளில் அந்த ரகசியத்தை போட்டு உடைத்து விடுவார்கள்.
அப்பேர்ப்பட்ட ப்ளேபாய் ஆர்யாவை ஒரு போராளியாக மாற்றி அவரது ப்ளேபாய் இமேஜுக்கு ஆப்பு வைத்திருக்கிறார் புறம்போக்கு என்கிற பொதுவுடைமை இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்.
நம்ம நாட்டுல ஒரு புரட்சியாளர்கள் என்றாலே அவர்கள் கறுப்பு நிறத்தில் இருப்பார்கள், தாடி வைத்திருப்பார்கள் என்கிற ஒரு தவறான எண்ணம் உள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஒரு புரட்சியாளர். அவர் அழகானவர் தான். இப்படி புரட்யாளர்கள் அழகானவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு காண்பிக்கத்தான் ஆர்யாவை இந்தப் படத்தில் நடிக்க வைத்தேன். நான் எதிர்பார்த்தபடியே போராளி கேரக்டருக்கு ஆர்யா மிகவும் பொருத்தமாக இருந்தார்.
அவருக்கு இருந்து வரும் ப்ளேபாய் இமேஜ் இந்தப்படம் ரிலீசானவுடனே காணாமப் போனாலும் ஆச்சரியப்படுறதுக்கு ஒண்ணுமில்ல. அப்படி இமேஜ் மாறினா நல்லது தானே? என்றார் சிரித்துக் கொண்டே…