மிரட்சி பட விழாவில் அண்ணனை வாழ்த்திய தம்பி

Get real time updates directly on you device, subscribe now.

ஜித்தன் ரமேஷ் ரீ என்ட்ரி கொடுத்துள்ள படம் மிரட்சி. இப்படத்தில் அவர் வில்லன் வேடம் ஏற்று நடித்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நடிகர்
ஜீவா பேசியதாவது,

“இப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமை இந்த விழாவில் உங்களை சந்திப்பது சந்தோசமாக இருக்கிறது. இங்கு யாருமே தோல்விப் படம் கொடுக்க நினைப்பதில்லை. எல்லாருமே உண்மையாகத் தான் உழைக்கிறார்கள். எல்லோரின் டேலண்ட்டும் எதோ ஒருநாள் எதோ ஒரு விதத்தில் வெளிப்படும். ரமேஷுக்கு டர் ஸ்டைலில் சாருக்கானுக்கு அமைந்த மாதிரி இப்படம் அமையும். இசை அமைப்பாளர், ஹீரோயின், அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

Related Posts
1 of 4

நான் ராம் படம் நடிக்கும்போது நான் வில்லனா, ஆண்டி ஹீரோவா என்று தெரியாமல் இருந்தேன். அப்போது அப்படத்தின் ஆர்ட் டைரக்டரிடம், ஆண்டி ஹீரோ என்பதைப் பேசினேன். அப்போது ஒரு லோக்கல் ஆள் ஆண்டி என்றால் அத்தை தானே? என்று கேட்டார். அப்போது ஆடியன்ஸ் அவ்வளவு வெகுளியாக இருந்தார்கள். ஆனால் இப்போது தெளிவாக இருக்கிறார்கள். ஆங்கிலப்படம் கூட எல்லாரையும் திருப்தி படுத்தும் படி எடுத்து விடலாம். ஆனால் தமிழ்ப்படம் அப்படி எடுப்பது கஷ்டம்.

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் விதவிதமான மக்கள் இருக்கிறார்கள். அவர்களை அவ்வளவு எளிதாக திருப்தி படுத்த முடியாது. ஆனால் மிரட்சி படம் அதைச் செய்யும். காரணம் டிரைலர் மிக வித்தியாசமாக இருப்பதால் நிச்சயம் இப்படம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று நம்புகிறேன்; வாழ்த்துகிறேன்” என்றார்