‘போதை ஏறி புத்தி மாறி’ நாயகியாக அறிமுகமாகும் பிரதைனி சர்வா!

Get real time updates directly on you device, subscribe now.

குறும்படங்களில் நடித்த தீரஜ் ஹீரோவாக நடிக்கும் போதை ஏறி புத்தி மாறி படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார் பிரபல மாடல் பிரதைனி சர்வா.

கே.ஆர். சந்துரு இயக்கும் இப்படத்தில் தனது அறிமுகம் குறித்து பிரதைனி சர்வா பேசும்போது, “தனிப்பட்ட முறையில், திரைப்படங்களில் சில பெண் கதாபாத்திரங்களை நான் எப்போதும் கவனித்துக் கொண்டிருக்கிறேன். அவை ரசிகர்களை உற்சாகப்படுத்தும். நடிகைகள் வெறுமனே பார்பி பொம்மைகள் அல்லது கவர்ச்சி சின்னங்களாக சித்தரிக்கப்படக் கூடாது என்பதை நான் நம்புகிறேன்.

Related Posts
1 of 134

இயக்குனர் சந்துரு எனக்கு கதையையும், என் கதாபாத்திரத்தையும் விளக்கிய போது, என் கதாபாத்திரம் பிருந்தாவை எனக்கு மிகவும் பிடித்துப் போனது. வெறுமனே என் கதாபாத்திரம் மட்டுமல்ல, படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் அழுத்தமானதாக இருந்தது. இயக்குனர் சந்துருவை பாராட்டும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை, ஆனால் கே.ஆர்.சந்துரு உண்மையில் திறமை வாய்ந்த இயக்குனர், அவரது திறமையை திரையுலகம் கண்டிப்பாக புகழும்” என்றார்.

திடுக்கிடும் திருப்பங்களை கொண்ட, சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் திரைப்படமாக தயாராகி வரும் இப்படத்தை ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, கேபி இசையமைக்கிறார்.