கர்நாடக துணை முதல்வர் வெளியிட்ட ‘விருஷபா ’ பட பாடல்!

Get real time updates directly on you device, subscribe now.

பான்-இந்தியா அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘விருஷபா ’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா, பெங்களூருவில் வெகு கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கர்நாடக மாநிலத்தின் மதிப்பிற்குரிய துணை முதல்வர் திரு.D.K.சிவகுமார் கலந்துகொண்டு, பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். அவரது பங்கேற்பு விழாவுக்கு தனித்துவமான பெருமையும் மரியாதையும் சேர்த்தது.

பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகள் பெற்ற நடிகர் மோகன்லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘விருஷபா ’ திரைப்படம், மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்திய திரைப்படங்களில் ஒன்றாகும். சமர்ஜித் லங்கேஷ் மற்றும் நயன் சாரிகா நடித்துள்ள இந்தப் புதிய பாடல், இளமையும், காதல்,உணர்வுகளும் நிறைந்த மென்மையான ரொமான்டிக் பாடல். இப்பாடல் வெளியான கணத்திலிருந்தே ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது.

பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய துணை முதல்வர் திரு. D.K.சிவகுமார், படத்தின் தலைப்பின் அர்த்தத்தை உணர்ச்சிப்பூர்வமாக விளக்கினார். ‘விருஷபா ’ என்றால் ‘காளை’ என்றும், அது வலிமை, உறுதி மற்றும் நேர்மறை சக்தியை குறிக்கிறது என்றும் அவர் கூறினார். தனது கையில் உள்ள காளை டாட்டூவை குறிப்பிட்டு, இப்படம் வலிமையுடனும், வெற்றியுடனும் அமைய கடவுளிடம் பிரார்த்தித்ததாக பகிர்ந்து கொண்டார்.

Related Posts
1 of 3

2025 டிசம்பரில் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டுக்குத் தயாராகும் ‘விருஷபா ’ படம், மிகுந்த நேர்மறை ஆற்றலைக் கொண்டதாக அவர் தெரிவித்தார். கர்நாடக மக்களின் சார்பில் படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்த அவர், தயாரிப்பாளர்கள் முதலீட்டை மீட்டெடுத்து லாபம் ஈட்டி, மேலும் நல்ல படங்களை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

மேலும், மோகன்லாலின் ‘விருஷபா ’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றும், இளம் நடிகர் சமர்ஜித் லங்கேஷ்க்கு 2026 வெற்றிகரமான ஆண்டாக அமையும் என்றும் வாழ்த்தினார். கன்னட திறமைகளை பான்-இந்திய அளவில் கொண்டு செல்லும் படக்குழுவின் முயற்சியைப் பாராட்டிய அவர், இளம் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் முழு ‘விருஷபா ’ குழுவிற்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார். இந்தப் பாடல் வெளியீடு, ‘விருஷபா ’ படத்தின் விளம்பரப் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.

நந்த கிஷோர் ( Nanada Kishore ) இயக்கியுள்ள ‘விருஷபா ’ படத்தில் மோகன்லால், சமர்ஜித் லங்கேஷ், ராகினி திவேதி, நயன் சாரிகா, அஜய், நேஹா சக்ஷேனா(Neha Saxena) கருடா ராம், வினய் வர்மா, அலி, அய்யப்பா P.ஷர்மா மற்றும் கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தந்தை-மகன் உறவின் ஆழமான பிணைப்பைக் கொண்டாடும் வகையில், உணர்ச்சி, பிரம்மாண்டம் மற்றும் அதிரடி ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ஒரு காவியமான திரைப்பயணமாக ‘விருஷபா ’ உருவாகியுள்ளது. மலையாளம் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாகிறது.