மொத ராத்திரி வெற்றிக்கு மனதார நன்றி சொன்ன ரிஷிகாந்த்
இந்த வருடத்தின் நிஜமான வெற்றிப்பட வரிசையில் மொத ராத்திரி படமும் இணைந்துள்ளது. இப்படத்தின் வெற்றிவிழாவை நேற்று படக்குழு கொண்டாடியது. விழாவில் படத்தின் நாயகன் ரிஷிகாந்த் பேசும்போது,

” உங்கள் வீட்டு பையனாக நினைத்து எனக்கும் இந்த படத்திற்கு ஆதரவு தந்த ஊடகத்துறையினருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. ஆறு வருடங்களாக இந்த படத்தை நானும் தம்பி ராஜாவும் சுமந்து கொண்டிருந்தோம். எங்களை நம்பி வாய்ப்பளித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. குடும்பத்தோடு அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து பார்த்து சிரித்து மகிழும்படியான ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்தோம். அது இன்று நடந்திருக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி” என்றார்