பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சாதனை படைத்த விஷாலின் ‘வில்லன்’

பாகுபலி -2 மற்றும் புலி முருகன் திரைப்படங்களுக்குப் பின் மோகன்லால் மற்றும் விஷால் நடிப்பில் வெளிவந்துள்ள வில்லன் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்துள்ளது. மோகன்லால் மற்றும் விஷால் நடிப்பில் சென்ற வாரம் அக்டோபர் 27ம் தேதி வெளிவந்த மலையாளப் படம் வில்லன்.
இந்த படத்தில் மோகன்லால் ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாகவும் , விஷால் டாக்டராகவும் நடித்திருந்தனர். அறிமுக இயக்குநர் உன்னிகிருஷ்ணன் இயக்கியிருந்த இந்தப்படம் தான் விஷாலுக்கு முதல் மலையாள திரைப்படமாகும்.
வில்லன் திரைப்படம் தான் தற்போது மலையாளத்தில் மோகன்லால் படங்களிலேயே அதிகம் வசூல் செய்த படமாக மாறியிருக்கிறது. இத்திரைப்படம் இதற்கு முந்தைய மோகன்லால் படங்களின் சாதனையை முறியடித்து விட்டது குறிப்பிடத்தக்கது. த்ரிஷ்யம் திரைப்படத்துக்கு பின்னர் மோகன்லாலின் நடிப்பை அனைவரும் ரசித்து பாராட்டிய திரைப்படம் இது தான் என்று கூறப்படுகிறது.
வில்லன் திரைப்படத்தில் மஞ்சு வாரியார் , ஹன்சிகா , ஸ்ரீகாந்த் ( தெலுங்கு நடிகர் ) , ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தை சல்மான் கான் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ”பஜிரங்கி பாய்ஜான்” திரைப்படத்தை தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ளார்.