அனுஷ்காவுக்கா இப்படி ஒரு சோதனை வரணும்..?

இன்னும் ஒரு வாரத்தில் ‘பாகுபலி 2’ படப்பிடிப்பை ஆரம்பிக்கத் தயாராகி விட்டார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி.
‘பாகுபலி’யின் முதல் பாகத்தில் சிறைக்கைதி தேவசேனையாகவே வந்து போனவருக்கு இந்த இரண்டாம் பாகத்தில் தான் பிரம்மாண்டமாக சண்டைகள் போடுவது, பிரபாஸுடன் டூயட் பாடுவது என ஸ்கோப்கள் அதிகம்.
இருந்தாலும் படப்பிடிப்பு ஆரம்பிக்க தாமதம் ஆகும் என்பதால் அந்த கேப்பில் ஆர்யாவுடன் இணைந்து நடித்த ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக சுமார் 17 கிலோ வரை எடையைக் கூட்டினார்.
இப்படி மெனக்கிட்டு எடையைக் கூட்டி நடித்தாலும் படம் அஞ்சு பைசாவுக்குத் தேறவில்லை. அது கூடப் பரவாயில்லை. அந்தப்படத்துக்காக கூட்டிய எடையை குறைக்கவே முடியாமல் இப்போது திண்டாடிக் கொண்டிருக்கிறார்.
ஆங்கில மருத்துவத்தால் ஏதாவது பக்க விளைவுகள் வந்து விடும் என்று பயப்படுவதால் தனது வழக்கமான யோகா, உடற்பயிற்சி ஆகியவற்றை எக்ஸ்ட்ராவாக செய்து கொண்டிருக்கிறார்.
இதனால் திட்டமிட்டபடி பாகுபலி 2 படப்பிடிப்பை அடுத்த வாரம் ஆரம்பிக்கப்பட்டாலும் இன்னும் ஒரு மாதம் கழித்து என்னுடைய காட்சிகளை படமாக்குங்கள் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறாராம் அனுஷ்கா.
அடச்சே…. யோகா டீச்சர் அனுஷ்காவுக்கா இப்படி ஒரு சோதனை வரணும்..?