பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பின்னணியை அம்பலப்படுத்தும் ‘மோசடி’

Get real time updates directly on you device, subscribe now.

ஜே.சி.எஸ் மூவீஸ் பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ”மோசடி”.

இந்த படத்தில் விஜூ நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பல்லவி டோரா நடித்துள்ளார். மற்றும் அஜெய்குமார், என்.சி.பி விஜயன், வெங்கடாச்சலம், நீலு சுகுமாரன், ஓ.எஸ்.சரவணன், மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் கே. ஜெகதீசன்

Related Posts
1 of 134

இது முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படம்.

கடந்த 2016 ம் ஆண்டு நவம்பர் 8 ம் தேதி இரவு 8 மணியளவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது.

அதைத் தொடர்ந்து பெரும் புள்ளிகள் அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை எப்படி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக மாற்றினார்கள், அதனால் மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார்கள், இந்த அறிவிப்பை பயன்படுத்தி எப்படி குறுக்கு வழியில் மோசடி செய்தார்கள், இந்த அறிவிப்பு சரியா? தவறா? என்பதை கிரைம் மற்றும் திரில்லருடன் கமர்ஷியல் கலந்து உருவாக்கி உள்ளேன் என்கிறார் இயக்குனர் கே.ஜெகதீசன்.