ரெஜினா பாடல் மட்டும் பாக்கி – ‘Mr.சந்திரமெளலி’ ஷூட்டிங் ஓவர்!
திரு டைரக்ஷனில் கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா கசண்டரா மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் தயாராகி வரும் ‘Mr.சந்திரமௌலி” படத்தின் படப்பிடிப்பு மிகத் தெளிவாக திட்டமிடப்பட்டு, வேகமாக நடந்து வருகின்றது.
இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவு பெற்றதையடுத்து இதன் நினைவாக இப்படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர். இப்படத்தில் ரெஜினாவின் பாடல் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் கேட்டபோது, ”தொழில் பக்தி உள்ள ஒரு கதாநாயகி ரெஜினா. அர்ப்பணிப்பிலும், நடிப்பிலும் அவருக்கு நிகர் அவரே. அவரது ஆற்றலும் பங்களிப்பும் இந்த படத்திற்கு பெரும் பலமாகவுள்ளது.
படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகின்றது. வரும் கோடை விடுமுறை காலத்தில் ‘Mr.சந்திரமௌலி’ ரிலீஸ் ஆகும் இப்படத்தில் இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன், சந்தோஷ் பிரதாப், சதீஷ், ஜெகன், மைம் கோபி, விஜி சந்திரசேகர் மற்றும் மனோபாலா ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்றார்.