பாடல் காட்சிகளுக்காக தாய்லாந்து சென்ற மிஸ்டர்.சந்திரமெளலி படக்குழு!

Get real time updates directly on you device, subscribe now.

திரு இயக்கத்தில், கார்த்திக், கவுதம் கார்த்திக்,வரலட்சுமி சரத்குமார், ரெஜினா கசண்டரா ஆகியோர் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘மிஸ்டர்.சந்திரமௌலி’.

இந்த படத்தை போப்தா மீடியா ஒர்க்ஸ் இந்தியா பி.லிட் சார்பில் ‘கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.

இது குறித்து இந்தபடத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், ”படத்தின் எல்லா கட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டது. படத்திலுள்ள நான்கு பாடல்களில் இரண்டு பாடல்கள் ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள இரண்டு பாடல்களை படமாக்க படக்குழுவினர் தாய்லாந்து சென்றுள்ளனர்.

Related Posts
1 of 9

கிராபிக்சில் காதல் பாடலையும், பேங்காக்கில் ஒரு பப் பாடலையும் படமாக்கியுள்ளனர். எங்கள் படக்குழுவினரின் சுறுசுறுப்பையும் அர்ப்பணிப்பையும் அங்கிருந்தவர்கள் கண்டு வியந்துள்ளனர். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளை உடனே துவங்கி கூடிய விரைவில் படத்தை ரிலீசுக்கு தயாராக்கவுள்ளோம்.

‘மிஸ்டர்.சந்திரமௌலி’ படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் வாங்கியுள்ளது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரம் நடைபெறும். இந்த படத்தை மே மதம் முதல் வாரம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். இது தமிழ்ரசிகர்களுக்கு ஒரு கோடை விடுமுறை விருந்தாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்துக்கு, ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். சந்தோஷ் பிரதாப், இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன், சதிஷ்,விஜி சந்திரசேகர், ஜகன் மற்றும் ‘மைம்’ கோபி ஆகியோர் இப்படத்தில் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.