கறார் காட்டிய த்ரிஷா! – ‘சக்சஸ் பார்ட்டி’யில் பாடம் புகட்டிய தயாரிப்பாளர்

Get real time updates directly on you device, subscribe now.

தாய்மொழியான மலையாளத்திலிருந்து வாய்ப்புகள் வந்த போதெல்லாம், அதில் நடிக்க மறுத்து பல ஆண்டுகளாக ஓடி ஒளிந்துக் கொண்டிருந்தவர் தான் த்ரிஷா.

சமீபகாலமாக வயதாகி விட்டதாலும், அதனால் பட வாய்ப்புகளும் குறைந்ததாலும் எந்த மலையாளப் படங்களை நடிக்க முடியாது என்று ஒதுக்கினாரோ? அதே மலையாளப் பட வாய்ப்புகளை கப்பென்று பிடித்துக் கொண்டு நடித்துக் கொண்டிருக்கிறார்.

அண்மையில் த்ரிஷா நடிப்பில் வெளியான ‘ஹே ஜூட்’ என்ற மலையாளப் படம் கேரளாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

மலையாளத்தில் நடித்த முதல் படமே ஹிட்டான சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும், அந்தப் படத்தின் ‘சக்சஸ் பார்ட்டி’க்கு தன்னை அழைக்கவில்லையே என்பதுதான் த்ரிஷாவை வருத்தமடையச் செய்திருக்கிறது.

Related Posts
1 of 15

படத்தின் சக்சஸ் பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்த அப்படத்தின் தயாரிப்பாளர் த்ரிஷாவை மட்டுமே கண்டிப்பாக அழைக்கக் கூடாது என்று திட்டமிட்டு தவிர்த்து விட்டார். தயாரிப்பாளரின் இந்த முடிவுக்கு முக்கிய காரணம் த்ரிஷா காட்டிய ‘கறார்’ தான் என்கிறது படக்குழு.

முன்னதாக இப்படத்தில் நடிக்க த்ரிஷாவை கமிட் செய்த போது அநியாய சம்பளம் கேட்டிருக்கிறார். ஒன்றுக்கு பலமுறை பேசிப்பார்த்தும் சம்பளத்தில் ரொம்பவே கறாராக இருதிருக்கிறார். சரி இயக்குனர் த்ரிஷா தான் வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் வேறு வழியில்லாமல் அவர் கேட்ட சம்பளத்தை கொடுத்து படத்தில் கமிட் செய்திருக்கிறார்கள்.

அந்த ஆத்திரத்தில் தான் படத்தின் சக்சஸ் பார்ட்டியில் த்ரிஷாவை வேண்டுமென்றே தவிர்த்து பாடம் புகட்டியிருக்கிறார் தயாரிப்பாளர்.

எண்ணிக் கொடுக்கிறவங்களுக்குத்தானே வலி தெரியும்!