க்ரிஷ்ன் விழிப்புணர்வு பாடல் !
நடிகர், இசையமைப்பாளர் க்ரிஷ், தன் பன்முக திறமையினால், தமிழ் சினிமாவில், புகழ் மிக்க படைப்பாளியாக, கவனம் குவித்து வருகிறார். சமீபத்தில் முருக கடவுள் குறித்து, ஆன்மிக பாடல் ஆல்பம் ஒன்றை உருவாக்கியிருந்தார். மிகப்பெரும் வெற்றியை குவித்த, அந்த ஆல்பம் பல முனைகளில் இருந்தும் பாராட்டுக்களையும் குவித்தது. இந்த நிலையில் தற்போது நம் சமூகத்திற்கு அவசியமான, கோவிட் தடுப்பூசி குறித்த, விழிப்புணர்வை உருவாக்கும் வகையில், ஒரு அற்புதமான பாடலை உருவாக்கியுள்ளார். SP Dr. சிவக்குமார் IPS, இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.