யுவன் நடத்தும் மாபெரும் இசை நிகழ்ச்சி!

Get real time updates directly on you device, subscribe now.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் எவர் கிரீன் ஹிட் என்பதை இசை ரசிகர்கள் நன்கு அறிவர். இரண்டு தலைமுறைகளாக தமிழ் திரையிசையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வெற்றிகரமாக வலம் வரும் யுவன் சங்கர் ராஜா திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல்… அவ்வப்போது ரசிகர்களுக்கு நேரலையாக இசை நிகழ்ச்சியை நடத்தி அற்புதமான இசை அனுபவத்தை வழங்கி வருகிறார். உலகின் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்திய யுவன் சங்கர் ராஜா தற்போது ‘U1 லாங் டிரைவ் லைவ் இன் கான்செர்ட்’ எனும் பெயரில் சென்னையில் உள்ள நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நேரலையாக இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். இந்த இசை நிகழ்ச்சியை இசை துறையில் சிறந்து விளங்கும் பல்வேறு முன்னணி இசையமைப்பாளர்கள் மற்றும் முன்னணி இசைக் கலைஞர்களுடன் இணைந்து இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி, உலக அளவில் நற்பெயரை சம்பாதித்த பத்து ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த நாய்ஸ் & கிரைன்ஸ் எனும் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பூமர் ஃபேஷன் எனும் முன்னணி ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம் விளம்பரதாரராக பங்களிப்பு செய்கிறது.

இந்நிலையில் இந்நிகழ்ச்சி தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதன்போது நாய்ஸ் & கிரைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மகாவீர் மற்றும் கார்த்திக் சீனிவாஸ், விளம்பரதாரரான பூமர் ஃபேஷன் நிறுவனத்தின் தலைவர் லிங்குசாமி மற்றும் ஹரிதா லிங்குசாமி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.