‘முத்துன கத்திரிக்காய்’ ஹீரோவானார் சுந்தர்.சி!

அவ்னி மூவிஸ் சார்பில் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த படத் தயாரிப்பை ஆரம்பித்திருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி.
‘முத்துன கத்தரிக்காய்’ என்று வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தை அவரிடம் உதவியாளராக பணியாற்றிய வெங்கட்ராகவன் இயக்குகிறார்.
சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜம் பாஜ்வா நடிக்கிறார். இவர்களுடன் சதீஷ், வி.டி.வி.கணேஷ், சிங்கம் புலி, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
40 வயதை நெருங்கியும் கல்யாணம் ஆகாமல் இருக்கும், முழுநேர அரசியல்வாதியான முத்துப்பாண்டிக்கு, இளம்பெண் மாயாவை பார்த்ததும் காதல் வருகிறது.
இதன்பின், அரசியல் காதல் இரண்டிலும்முத்துப்பாண்டி சந்திக்கும், சுவாரஸ்யமான பிரச்சனைகளும், சம்பவங்களும் அதில் அவர் செய்யும் நகைச்சுவை கலாட்டாக்களுமே ‘முத்துன கத்திரிக்காய்’.
திருநெல்வேலி, சென்னை, டெல்லி போன்ற இடங்களில் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. மேலும் படத்தின் இரண்டு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட உள்ளது.