சிவகார்த்திகேயனை குறி வைக்கும் ‘பீப் சாங்’ பிரதர்ஸ்!

Get real time updates directly on you device, subscribe now.

siva1

”ஆபாசமே உன் பெட் நேம் தான் சிம்புவா…” என்று கலாய்க்கிற அளவுக்கு தமிழகம் முழுக்க சிம்புவுக்கு எதிரான எதிர்ப்புக் குரல்கள் வழக்குகளாக ஆங்காங்கே தாக்கலாகிக் கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே 7 வழக்குகள் சிம்பு – அனிருத் மீது போடப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் இரண்டு வழக்குகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பிலும், சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி சார்பிலும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போடப்பட்டது.

இப்படி நாளோரு மேனியும் பொழுதொரு எண்ணிக்கையுமாக சிம்பு – அனிருத் மீதான பிடி இறுகிக் கொண்டிருக்கிறது.

அப்படி இருந்தும் அது என்னுடைய தனி மனித சுதந்திரம் என்கிற ரேஞ்சில் தான் பேசிக்கொண்டிருக்கிறார் சிம்பு.

அப்பா டி.ஆரோ மாப்பிள்ளை அவர் தான், ஆனால் சட்டை அவரோடது இல்லை என்பது போலவே பாடல் எழுதியது சிம்பு தான். ஆனால் அந்த வரிகளை யாரோ சிம்புவுக்கு வேண்டாதவன் சேர்த்து விட்டு விட்டான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

முதலில் அனிருத் தான் இசையமைத்தார் என்று சொன்ன சிம்பு இரண்டு தினங்களுக்கு முன்பு அவருக்கும் இந்தப்பாடலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பல்டியடித்தார்.

Related Posts
1 of 96

அப்படியானால் அந்தப்பாடலுக்கு இசையமைத்தது யார்? என்கிற கேள்விக்கு இதுவரை அவரிடமிருந்து சரியான பதிலில்லை.

இதற்கிடையே இந்தப்பாடலை யூ- டியூப்பில் பதிவேற்றம் செய்தது யார் என்கிற கோணத்தில் விசாரித்துக் கொண்டிருக்கும் போலீசார் அடுத்து சிம்புவுக்கு நெருக்கமானவர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர முடிவு செய்திருக்கிறார்கள்.

இப்படியாக இருவருக்குமான பிடி இருகி வரும் நிலையில் அனிருத்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் மூலமாகத்தான் எல்லோருக்கும் பரவ ஆரம்பித்திருக்கிறது என்று ஒரு புது குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார்கள்.

அனிருத்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். அவருக்கு அனிருத் கேட்டுப்பார் என்று ஜாலியாக பாடலை அனுப்பி வைக்க, அவர் தான் தனது நண்பர்களுக்கு பார்வேர்டு செய்ய அது அப்படியே எல்லோர் மத்தியிலும் பரவியிருக்கிறது என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த விஷயம் இப்போது போலீசார் கவனத்துக்கு சென்றுள்ளது என்றும் இதுபற்றி சிவகார்த்திகேயனிடமும் போலீசார் விசாரணை நடத்தலாம் என்று சொல்லப்படுகிறது.

சிவகார்த்திகேயன் இப்போது தான் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வளர்ந்து வருகிறார். இந்த நேரத்தில் இந்த விவகாரத்தில் அவருடைய பெயரும் சேர்ந்து அடிபடுவது அய்யகோ இது வெறும் வதந்தியாக மட்டுமே இருக்கட்டும்!