முத்து என்கிற காட்டான் வெற்றி விழா !

Get real time updates directly on you device, subscribe now.

விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோ ஹாட் ஸ்டார் ஒரிஜினல்ஸ் படைப்பாக, இயக்குநர் மணிகண்டன் தலைமையில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், B. அஜித் குமார், M. மணிகண்டன் இணைந்து இயக்க, மாறுபட்ட களத்தில் உருவான சீரிஸ், “முத்து என்கிற காட்டான்”.

ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில், 2026 மார்ச் 27 ஆம் தேதி வெளியான இந்த சீரிஸ் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. வெளியான குறுகிய காலத்தில், மிகப்பெரிய அளவிலான பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

படக்குழுவினர் அனைவரும் இணைந்து கேக் வெட்டி இந்த வெற்றியைக் கொண்டாடியுள்ளனர்.

இந்நிகழ்வினில்..

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேசியதாவது..,

Related Posts
1 of 16

இந்த புராஜக்ட் எனக்கு ரொம்ப சந்தோஷமான அனுபவம். நாங்க பண்ணுற வேலை எல்லாருக்கும் நிறைவாக இருக்கனும் என்று தான் நானும் மணிகண்டனும் திட்டமிட்டோம். இடையில் இது நின்று விட்டது என்ற நிலை வந்த போதும், அதுவாக மீண்டும் நடந்து இந்த இடத்தை வந்தடைந்திருப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.

இந்தக் கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தனி கதை இருக்கு. ஒவ்வொரு காட்சியும் ஒரு வாழ்க்கையைச் சொல்லும் மாதிரி இருக்கும். அதுதான் இந்த புராஜக்டை எனக்கு ரொம்ப ஸ்பெஷல் ஆக்குது. இந்தக் கதாபாத்திரம் ஒரு சாதாரண மனிதனோட வாழ்க்கையை பிரதிபலிக்குது. எந்த பெரிய விஷயங்களும் இல்லாமல், சிம்பிளான வாழ்க்கையிலேயே எவ்வளவு அழகு இருக்குன்னு காட்டுது.

இயக்குநர் மணிகண்டன் தான் அஜித்குமாரை அறிமுகப்படுத்தினார். இந்த படைப்பில் உழைத்த அத்தனை பேரும் முழு அர்ப்பணிப்போடு உழைத்தார்கள். கதை நம்ம வாழ்க்கையோட நெருக்கமாகவும் இருந்தது. அதனால அந்த கேரக்டருக்குள் போவது எனக்கு ரொம்ப ஈஸியாக இருந்தது.

முத்து மணிகண்டன் கூட்டி வந்தவர், பல வருட நட்பு நான் பொறாமைப்படும் அளவு நடிப்பை கொட்டியிருக்கிறார். வடிவேல் முருகன் என்னை ஆச்சரியப்படுத்தினார். அவர் பட விமர்சனம் செய்பவர் எப்படி நடிப்பார் என நினைத்தேன் ஆனால் அதைத்தாண்டி அசத்திவிட்டார். பார்வதியும் அவர் கதாப்பாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருந்தார்.

இந்த சீரிஸ் முழுதாக உருவாகி வந்ததற்கு Pradeep Milroy Peter (Creative Head, Hotstar Specials- Tamil ) , Senthil (Executive Producer, HotStar Specials) மிக முக்கியமான காரணம். எல்லோரையும் ஒன்றிணைத்து, அனைவருக்கும் தேவைப்பட்டதை செய்து இந்த இடத்திற்கு சீரிஸை எடுத்து வந்துள்ளார். அவருக்கு நன்றி. செட்டில் நாங்க எல்லாரும் ஒரு ஃபேமிலி மாதிரி தான் இருந்தோம். ஒவ்வொருத்தரும் ஒருத்தரை சப்போர்ட் பண்ணி தான் இந்த படைப்பை முடித்தோம். இந்த படைப்பில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.