இளையராஜா – பஞ்சு அருணாசலம் : 21 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் வெற்றிக் கூட்டணி!

Get real time updates directly on you device, subscribe now.

ilayaraja1

21 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சு அருணாசலம் வரிகளில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள படம் “முத்துராமலிங்கம்”.

கவுதம் கார்த்திக், கேத்த்ரின் தெரசா நடிக்கும் இப்படத்தில் பிரபு, சுமன், ராதாரவி, விவேக், சுகன்யா, ரேகா, சிங்கம்புலி, சிங்கமுத்து நடிக்கவுள்ளனர்.

குளோபல் மீடியா ஒர்க்ஸ் டி.விஜய் பிரகாஷ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை ராஜதுரை கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கவுள்ளார். ஒளிப்பதிவு யு.கே.செந்தில்குமார்.

Related Posts
1 of 22

முத்துராமலிங்கம் படம் மூலமாக மூன்று தலைமுறைகளுக்கு பாடல் எழுதும் பஞ்சு அருணாசலம் கவுதம் கார்த்திக் நடிக்கும் முத்துராமலிங்கம் திரைப்படத்திலும் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.

பஞ்சு அருணாசலத்துடன் சேர்ந்து இசைஞானி இளையராஜா 40 ஆண்டுகாலமாக திரையுலகில் பவனி வருகின்றனர்.

நடிகர் முத்துராமனுடன் “காற்றினிலே ஒரு கீதம்”, “மயங்கினாள் ஒரு மாது”, நடிகர் கார்த்திக்குடன் “சின்ன கண்ணம்மா” “என் ஜீவன் பாடுது”, தற்போது கௌதம் கார்த்திக்குடன் “முத்துராமலிங்கம்” என முன்று தலைமுறைகளுடன் பணியாற்றியவர் பஞ்சு அருணாசலம்.

மேலும் நடிகர் முத்துராமன் வில்லனாக நடித்த ‘பாயும்புலி’ படத்திலும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல இளம் இயக்குனர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுடன் தற்போது பணியாற்றி வருகிறார் பஞ்சு அருணாசலம்.