கெத்துக்கு வரிச்சலுகை ‘கட்’ : ஆதாரத்தோடு கோர்ட்டுக்கு போகும் உதயநிதி

ஆபாசம், வன்முறை என வரிச்சலுகை ‘கட்’டாகக்கூடிய அளவுக்கு எந்த மோசமான காட்சியும் இல்லையென்றாலும் டைட்டிலை காரணம் காட்டி ‘கெத்து’ படத்துக்கு வரிச்சலுகையை மறுத்திருக்கிறது தமிழக அரசு.
‘கெத்து’ என்கிற வார்த்தை தமிழ் வார்த்தை இல்லை. அந்த ஒரு காரணத்துக்காகவே இந்தப்படத்துக்கு வரிச்சலுகை மறுக்கப்படுகிறது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் உதயநிதியோ ‘கெத்து’ என்பது தமிழ் வார்த்தை தான். ‘கெத்து’ என்றால் ‘தந்திரம்’ என்று பொருள் இருப்பதாக தமிழ் டிக்ஷ்னரி ஒன்றில் இருக்கும் ஆதாரத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார்.
”இந்த ஒரு ஆதாரத்தை வைத்தே நீதிமன்றம் சென்று வரிச்சலுகை பெறப்போகிறேன்” என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.