சோகக் கதை தான், ஆனா விழுந்து விழுந்து சிரிப்பீங்க… : வியக்க வைக்கும் விக்னேஷ் சிவன்!
சிம்பு- வரலட்சுமி நடிப்பில் ரிலீசான ‘போடா போடி’ படத்துக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் ‘நானும் ரெளடி தான்’.
தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தின் டைட்டில் என்னவோ ஆக்ஷன் பட ரேஞ்சில் இருந்தாலும் இது முழுக்க முழுக்க காமெடி எண்டர்டெயினர் என்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
எனக்கு இசையமைப்பாளர் அனிருத் ரொம்ப நெருக்கமான நண்பர். அவர் மூலமாகத்தான் நான் தனுஷ் சாருக்கு அறிமுகமானேன், ‘போடா போடி’க்கு அப்புறம் அடுத்த படம் பண்ணலாம்னு அந்த ஸ்க்ரிப்ட் வேலையில இருந்தப்ப தனுஷ்சார்கிட்ட இந்தப்படத்தோட கதையை சொன்னேன். விஜய் சேதுபதி, நயன்தாரான்னு வேற லெவலுக்கு கொண்டு போயிட்டார்.
நயன்தாராகிட்ட அவங்களை நேர்ல சந்திச்சு கதை சொன்னவுடனே பிடிச்சுப் போச்சு. உடனே நடிக்க ஓ.கே சொல்லிட்டாங்க. இது ஒரு முழுக்க முழுக்க ஜாலியான காமெடிப்படம்.
அதாவது நானும் ரெளடியாகணும்னு ஆசைப்படுற ஒரு ஹீரோ. ஒரு சோகமான கதையோட இருக்கிற ஒரு பொண்ணு. ரெண்டு பேரும் ஒரு பாயிண்ட்ல சிங்க் ஆகுறாங்க. அந்தப் பொண்ணுக்கு ஒரு விஷயம் தேவை. அதை அந்தப்பையன் பண்ணிக்கொடுக்கணும்னு நெனைக்கிறார். ஆனால் அதை செஞ்சு கொடுக்கிறதுக்கு அவருக்கு எந்தவித பலமும் இல்லை. பட் அதை அவன் செஞ்சு கொடுக்கிறானா இல்லையாங்கிறது தான் படத்தோட சுவாரஷ்யம்.
பொதுவாவே எனக்கு ஃபீல்குட் படங்கள் தான் ரொம்பப் பிடிக்கும். என்னோட கதை முடிஞ்ச வரைக்கும் இயல்பா இருக்கணும்கிறதுக்காக டைம் எடுத்துப்பேன். ஒரு பையன் ஒரு பொண்ணு மீட் பண்ணுவாங்க அவங்க சேர்ந்தாங்களா? இல்லையா?ங்கிறது தான் பொதுவான படங்களோட கிளைமாக்ஸா இருக்கும். ஆனா என்னோட ‘போடா போடி’ படத்தோட கதை பையனும் பொண்ணும் சேர்றது தான் முதல் காட்சியே இருக்கும். அங்கேர்ந்து அடுத்தடுத்த விஷயங்கள் ஸ்டார்ட் ஆகிப் போகும்.
அதே மாதிரி தான் இந்தப்படமும்!
ஒரு ரெளடி தான் இப்படித்தான் இருப்பான்னு சில விஷயங்கள் இருக்கும் இல்லையா? அந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் இல்லாமல் ஒரு எளிமையாக கதையா உணர்ச்சி வசப்படக்கூடியதா இருக்கும்.
இந்தப் படத்தோட கதையை சும்மா நாம கேட்டோம்னா ரொம்ப சோகமா இருக்கும். அதுவே படமா பார்த்தா சிரிக்க வைக்கும். அப்படித்தான் நான் முயற்சி பண்ணிருக்கேன். அதுதான் என்னோட ஐடியாவே… ஒரு எமோஷனல் கதை. அதை காமெடியா சொல்லிருக்கேன் என்றார்.
கேட்கும் போதே படத்தைப் பார்த்தே ஆகணும்னு ஆவலைத் தூண்டுதே…!