ஏதாவது பிரச்சனைன்னா விஷால்கிட்ட தான் போய் நிற்பேன் – விஷ்ணு விஷால் அதிரடி
‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஷ்ணு இதுவரை எட்டு படங்கள் நடித்து விட்டார்.
ரிலீசான எட்டு படங்களுமே தயாரிப்பாளர்களின் பர்ஸை பதம் பார்க்காத படங்கள் தான். இன்னும் கையில் இடம் பொருள் ஏவல், வீர தீர சூரன், போடா ஆண்டவனே என் பக்கம், கலக்குற மாப்ளே என்று வரிசையாக படங்களை வைத்திருக்கிறார்.
என்னதான் வெற்றி வந்தாலும் நல்ல கதையம்சமுள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்பதை விஷ்ணு செலெக்ட் செய்யும் படங்களைப் பார்த்தாலே புரியும்.
இப்படி தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி ஹீரோக்களில் லிஸ்ட்டில் தானும் இருப்பதற்கு தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், மீடியாக்கள் தான் காரணம் என்றார் விஷ்ணு விஷால்.
நேற்று தனது பிறந்தநாளையொட்டி நிருபர்களை சந்திக்க வந்த விஷ்ணு விஷால் மனம் திறந்து பேசினார்.
அதில் தன்னை ஹீரோவாக வைத்து முதல் படம் தயாரித்த தயாரிப்பாளர் ஆனந்த் சக்கரவர்த்தியையும் மறக்காமல் நினைவு வைத்து நன்றி தெரிவித்தார்.
”என்னோட முதல் படம் ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தை தயாரித்த ஆனந்த் சக்ரவர்த்தி சாருக்கு இந்த நேரத்துல நான் நன்றி தெரிவிச்சுக்கிறேன். அவர் தான் என்னை நம்பி முதல் முறையாக பணம் போட்டு படம் தயாரிச்சார். அந்தப்படத்தோட டைரக்டர் சுசீந்திரன் சார் என்னோட காட்ஃபாதர் மாதிரி. இன்னைக்கு இந்தளவுக்கு என்னோட சினிமா கேரியர் ஸ்டெடியா இருக்குன்னா அதுக்கு அவரோட அட்வைஸ்களும் ஒரு காரணம்.
என்றவர் தனது பெயர்க்காரணத்தை தெரிவித்தார். என்னோட ஒரிஜினல் பேரு விஷால் தான். ஆனா ஏற்கனவே விஷால் பெரிய ஹீரோவா இருந்தார். அது உங்க எல்லாருக்கும் தெரியும். அதனால என்னோட பேரை விஷ்ணுன்னு மாத்தினேன். அப்புறம் ஒரிஜினல் பேரு இருந்தா நல்லா இருக்கும்னு நெனைச்சேன். விஷாலும் என்னோட திக் ப்ரெண்ட் ஆயிட்டாப்ல. சரி தப்பா எடுத்துக்க மாட்டார்னு என்னோட பேரை விஷ்ணு விஷால்னு மாத்திட்டேன்.
இன்று என்னோட பிறந்தநாள். இந்த நல்ல நாள்ல என்னோட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் எல்லாருக்கும் நன்றி தெரிவிச்சுக்கிறேன். பொதுவா ஒரு ஹீரோ நடிச்ச படத்தைப் பார்த்துட்டு இன்னொரு ஹீரோ ஒரு மெசேஜ் மட்டும் பண்ணிட்டுப் போயிடுவாங்க. அப்படி இருக்கிற சூழல்ல என்னோட ஜீவா படத்தைப் பார்த்த விஷால் இந்தப் படத்தை நான் ரிலீஸ் பண்றேன்னு சொன்னார். அதை கேட்கும் போதே எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு.
ஏன்னா ஒரு ஹீரோ படத்தை இன்னொரு படத்தை எடுத்து ரிலீஸ் பண்றது சாதாரண விஷயம் கிடையாது. அந்தளக்கு அவர் என்னோட மூத்த சகோதரர் மாதிரு இருக்கார். ஏதாவது ஒரு பிரச்சனைன்னா நாளைக்கு அவர்கிட்ட போய் நிக்கிற அளவுக்கு ஒரு பிரெண்ட் அவர். அவர் என்னைக்குமே என்கூட நிற்பார். அதேமாதிரி தான் ஆர்யாவும், விக்ராந்த்தும். இதெல்லாம் எனக்கு கிப்ட் மாதிரி. அந்த வகையில எனக்கு இண்டஸ்ட்ரியில நல்ல நண்பர்கள் கெடைச்சிருக்காங்க… என்றார் விஷ்ணு விஷால்.
பழசை நெனைச்சுப் பார்க்கி்ற மனசே உங்களை இன்னும் உசரத்துக்கு கொண்டு போகும் விஷ்ணு விஷால்.