லவ்வா…? : சமந்தாவுக்கு டோஸ் விட்ட நாக சைதன்யா குடும்பம்

Get real time updates directly on you device, subscribe now.

samantha2

மீடியாக்கள் பேட்டி கேட்டால் படத்தைப் பற்றி பேசிவிட்டு அதோடு அடுத்தடுத்த படங்களில் நடிக்கப் போனோமா? நாலு காசு சேர்த்தோமா? என்றில்லாமல் தேவையில்லாமல் பெர்சனல் சமாச்சாரத்தை சொல்லப் போய் சிக்கலில் மாட்டியிருக்கிறார் சமந்தா.

சில வருடங்களுக்கு முன்பு வரை சித்தார்த்துடன் நெருக்கம் காட்டி வந்த சமந்தா தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து திருப்பதி கோவிலில் யாகமெல்லாம் செய்து விட்டு வந்தார். திடீரென்று மனக்கசப்பு ஏற்பட இருவரும் பிரிந்தனர்.

அதன்பிறகு ”நான் தனியாகத்தான் இருக்கிறேன்” என்று சொல்லி வந்த சமந்தா கடந்த சில வாரங்களுக்கு முன்பு ”நான் ஒரு ஹீரோவை காதலிக்கிறேன்” என்று மீடியாக்களிடம் உளறிக் கொட்டினார்.

இது போதாதா ஊடகங்களுக்கு..?

Related Posts
1 of 15

அந்த இளம் ஹீரோ யார் என்பதை மோப்பம் பிடித்த மீடியாக்கள் அது தெலுங்கு ஹீரோ நாகர்ஜூனாவின் மகன்களில் ஒருவரான நாக சைதன்யா தான் என்கிற விபரத்தை வெளியிட்டன. அதோடு இருவரும் தியேட்டரில் ஒன்றாக அருகருகே உட்கார்ந்து படம் பார்ப்பது, பொது இடங்களில் ஜோடி போட்டு போவது போன்ற புகைப்படங்களையும் பகிர்ந்தன.

இந்த தகவல் வெளியானதும் சமந்தா எந்த கருத்தும் சொல்லவில்லை. அதேபோல நாக சைதன்யாவும் எந்த கருத்தும் சொல்லவில்லை. ஆனால் நாக சைதன்யாவின் குடும்பத்திலிருந்து பெரும் எதிர்ப்புக் குரல்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. சமந்தாவின் இந்த காதல் சமாச்சாரத்தை நாக சைதன்யா குடும்பத்தினர் கண்டித்திருக்கிறார்கள்.

லவ்வா..? எங்கவீட்டு பையன் கூடவா? அதெல்லாம் சரிப்படாது? இனிமே இதைப்பற்றி மீடியாக்களிடம் வாய் திறக்கக் கூடாது என்று சமந்தாவை கூப்பிட்டு செம டோஸ்விட்டு அனுப்பியிருக்கிறார்கள்.

‘அழகு’ன்னாலே ‘ஆபத்து’ தான் போலிருக்கு!