மனநல மருத்துவருடன் சந்திப்பு – என்னாச்சு ‘க்யூட்’ சமந்தாவுக்கு?
கேரக்டர்களுக்காக மெனக்கிடுகிற ஹீரோக்களை பார்த்திருக்கிறோம். கமல்ஹாசன், விக்ரம் உட்பட இன்னும் சில ஹீரோக்களை இதற்கு உதாரணமாக அடையாளம் காட்டலாம்.
ஹீரோயின்களில் சில பேர் தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரில் இன்னும் தத்ரூபமாக நடிக்க மெனக்கிடுவார்கள். ‘பாபி ஜஸூஸ்’ என்ற ஹிந்தி படத்தில் பிச்சைக்காரி கேரக்டரில் நடிப்பதற்காக அசல் பிச்சைக்காரர்களுடன் சேர்ந்து நடிகை வித்யாபாலன் ஹைதராபாத் ரயில்நிலையத்திற்கு வெளியே பிச்சை எடுத்த சம்பவமெல்லாம் உண்டு.
தமிழில் ‘கொடி வீரன்’ படத்துக்காக நடிகை பூர்ணா நிஜமாகவே மொட்டை போட்டார். இப்படிப்பட்ட சில நடிகைகள் கேரக்டருக்காக மெனக்கிட்டாலும் பெரும்பாலான நடிகைகள் ஷூட்டிங் ஸ்பாட்டில் டைரக்டர் என்ன செய்யச் சொல்கிறாரோ? அதை நடித்துக் காட்டி விட்டுச் சென்று விடுவார்கள்.
தமிழில் விஷால் ஜோடியாக ‘இரும்புத்திரை’ படத்தில் நடித்திருக்கிறார் சமந்தா. சமூக வலைதளங்களில் நமக்கு தெரியாமல் நடக்கும் நிறைய மர்மங்களை பற்றியும், அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் இப்படம் பேசுகிறது. மிலிட்டரி பேக் டிராப்பில் இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் மித்ரன்.
இந்தப் படத்தில் தான் சமந்தா டாக்டர் ரதிதேவி என்கிற மனநல மருத்துவர் கேரக்டரில் நடித்திருக்கிறாராம் சமந்தா. வெள்ளை கோட்டும், ஸ்டெதஸ்கோப்பும் போட்டுக்கொண்டு டாக்டராக நடிப்பது என்பது கஷ்டமான விஷயம் இல்லை தான். இருந்தாலும் ஒவ்வொரு நோய் சார்ந்த மருத்துவருக்கும் வித்தியாசமான அணுகுமுறைகள் கண்டிப்பாக இருக்கும்.
இதற்காகவே சில மன நல மருத்துவர்களை நேரில் சந்தித்து, அவர்களிடம் வரும் பெக்கூலியர் கேஸ்கள் பற்றியும், அந்த கேஸ்களை அவர்கள் கையாளும் விதம் பற்றியும் கேட்டறிந்து, ஒரு நிஜமான மனநல மருத்துவரைப் போலவே கேரக்டரில் தத்ரூபம் காட்டியிருக்கிறாராம் சமந்தா.
நான் கூட வேற என்னமோன்னு நெனைச்சிட்டேன்!