படமும் கெடக்கல… பைனான்ஸும் கெடைக்கல… : பரிதவிக்கும் ஸ்ரீகாந்த்!
‘பாகன்’ படத்துக்குப் பிறகு புதுப்பட வாய்ப்புகள் அமையாததால் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் நடிகர் ஸ்ரீகாந்த்.
அதன்பிறகும் ‘ஓம் சாந்தி ஓம்’, ‘சவுகார் பேட்டை’ என ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளி கம்பெனிகளில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் ரிலீசாகின. ஆனால் இரண்டுமே எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.
அதுதான் இப்போது ஸ்ரீகாந்த்தின் சொந்தப்படமான ‘நம்பியார்’ ரிலீசுக்கும் வில்லனாக வந்து நிற்கிறது.
ஒருபக்கம் வெளிக் கம்பெனி தயாரிப்பாளர்கள் சிலர் இப்போதும் ஸ்ரீகாந்த்தை ஹீரோவாக வைத்து படம் தயாரிக்க முன் வந்தாலும் அவரது பேரைச் சொல்லி பைனான்ஸ் கேட்டால் யாரும் கொடுக்கத் தயாராக இல்லையாம்.
சரி சொந்தப் படத்தையாவது ரிலீஸ் செய்யலாம் என்றால் அதற்கும் யாரும் பைனான்ஸ் தர முன் வரவில்லையாம்.
இதனால் எடுத்து வைத்து நீண்ட நாட்களாக பெட்டிக்குள் இருக்கும் சொந்தப்படத்தை எப்படி ரிலீஸ் செய்வது என்று பரிதவித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீகாந்த்.
பேசாம படத்தோட பேரை எம்ஜிஆர்ன்னு வெச்சுப் பாருங்களேன்…. ஏதாவது நல்லது நடந்தாலும் நடக்கலாம்…