தனுஷ் பட வாய்ப்பை இழந்தார் சமந்தா : பின்னணியில் நாக சைதன்யா!

Get real time updates directly on you device, subscribe now.

samantha1

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வட சென்னை’ படத்தில் நடிக்க பயிற்சியெல்லாம் எடுத்துக் கொண்டிருந்த சமந்தா இப்போது திடீரென்று அந்தப் படத்திலிருந்து விலகியிருக்கிறார்.

‘விசாரணை’ படத்தின் வெற்றிக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கும் படம் ‘வட சென்னை.’

தனுஷ் கதாநாயகனாக நடிப்பதோடு லைகா புரொடகஷன்ஸ் உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார்.

ஒரு பாகம் தான் இந்தப்படம் வரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் கிட்டத்தட்ட மூன்று பாகங்களாக எடுக்க முடிவு செய்திருக்கிறார் இயக்குநர் வெற்றி மாறன்.

இப்படி மூன்று பாகங்களாக எடுக்கப்படுவது தான் சமந்தாவுக்கு இந்தப் படத்தில் நடிக்க கொடுத்து வைக்கவில்லை என்று தெரிகிறது.

Related Posts
1 of 58

ஆமாம், சமீபகாலமாக பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் காதலில் கிசுகிசுக்கப்படும் சமந்தா இந்த ஆண்டு இறுதிக்குள் அவரை திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டிருக்கிறாராம்.

அப்படி திருமணம் முடிவாகி விட்டால் திருமணத்துக்குப் பிறகு நடிக்கக் கூடாது என்கிற கண்டிஷன் நாக சைதன்யா குடும்பத்திலிருந்து வந்தாலும் வரலாம்.

அதனால் மூன்று பாகங்களாக எடுக்கப்பட இருக்கும் ‘வட சென்னை’ படத்துக்கு அதிக நாட்கள் கால்ஷீட் தேவைப்படும் பட்சத்தில் அதை கொடுக்க முடியாத நிலை ஏற்படும்.

அந்த ஒரு காரணத்துக்காகவே ‘வட சென்னை’ படத்தில் நடிக்க முடியாமல் விலகியிருக்கிறாராம் சமந்தா.

சமந்தா விலகியதையடுத்து அமலாபாலிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.