‘ஹிப் ஹாப் ஆதி’ குழுவிலிருந்து கிளம்பியிருக்கும் இன்னொரு இசையமைப்பாளர்!
யு -டியூப்பில் ‘ஹிப் ஹாப் தமிழா’ எனும் பெயரில் ஆல்பத்தை வெளியிட்டு லைம் லைட்டிற்கு வந்தவர் தான் ஹிப் ஹாப் ஆதி.
அதன்பின் இவர் திரையுலகில் பிரபல இசையமைப்பாளராக மாறியது, தொடர்ந்து ஹீரோவானது எல்லாம் நாம் அறிந்த கதை..
அந்த வகையில் ஹிப் ஹாப் ஆதியின் குரூப்பில் இருந்து நமக்கு இன்னொரு இசையமைப்பாளர் கிடைக்கவிருக்கிறார் என்பது ‘ ஜோஸ் விவின்’ உருவாக்கியுள்ள ஆல்பத்தை பார்க்கும்போது தெரிகிறது.
ஹிப் ஹாப் ஆதியின் ஆல்பங்களில் பாடிய இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன் தனியாக ‘நம்ம ஊரு பாய் பேண்ட் (Namma Ooru Boy Band (NOBB))’ எனும் பெயரில் ‘காஸ்மோபாலிட்டன் காதலி (Cosmopolitan Kadhali )’ எனும் ஆல்பம் வெளியிட்டார்.
அது சூப்பர்ஹிட் ஆனது.
இந்த வருடமும் ‘உன்னை சேர்ந்தால்’ எனும் ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். அதுவும் பரவலான வரவேற்பை பெற்று வருகிறது. ஆல்பத்தில் வெற்றியை ருசித்த இவரது அடுத்த இலக்கு முழுநீள சினிமாவுக்கு இசையமைப்பது தானாம்.
அதையும் விரைவில் தொட்டு விடுவார் என நம்புவோம்.