வான்மூன்று- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

வெவ்வேறு சிக்கல்களுடன் மருத்துவமனைகளில் இருக்கும் மூன்று ஜோடிகளின் கதை

டெல்லி கணேஷின் மனைவி லீலாவிற்கு ஒரு ஆபரேஷன் செய்யவேண்டும். அதற்கு பணம் வேண்டும். அவர் அன்பில்லாத உறவுகளிடம் பணம் கேட்டு அலைகிறார். அவருக்கு பணம் கிடைத்ததா? எலைட் கணவன் மனைவியான வினோத் கிஷன் அபிராமி வெங்கடாச்சலம் வாழ்வில் ஒரு அதிர்ச்சிகரமான சூழலை மருத்துவர் விவரிக்கிறார். அதிலிருந்து அவர்களால் மீள முடிகிறதா? ஒரு அரசு மருத்துவமனையில் ஆதித்யா பாஸ்கர் சூசைட் அட்டர்ன் பண்ணி அட்மிட் ஆகிறார். அவர் அருகிலே அம்மு அபிராமியும் அட்மிட் ஆகிறார். இருவருக்குள்ளும் சோகம் கடந்த ஒரு கெமிஸ்ட்ரி உருவாகிறதா? இப்படி மூன்று ஜோடிகளின் வானத்தின் கீழ் நடப்பது தான் இந்தப்படத்தின் கதை

மூன்று ஜோடிகளும் நன்றாகவே நடித்துள்ளனர். அம்மு அபிராமி தன் அம்மாவுடன் பேசும் ஒரு உருக்கமான காட்சியில் தனித்தடம் பதித்துள்ளார்..அந்த அம்மா கேரக்டரில் நடித்தவரும் வேறலெவலில் நடித்துள்ளார். டெல்லி கணேஷ் தன் அனுபவ நடிப்பால் அசத்தியுள்ளார். லீலா இயல்பாக நடித்துள்ளார். வினோத் கிஷன் கொடுத்த வேலையைச் சரியாக செய்ய முயற்சித்துள்ளார். அபிராமி வெங்கடாச்சலம் எமோஷ்னல் ஏரியாவில் நன்றாக நடித்துள்ளார்.

ஆர்2 ப்ரோஸ் இசையில் சாங்ஸ், பேக்ரவுண்ட் ஸ்கோர் ஓகே ரகம். ஒளிப்பதிவில் இன்னும் அழகியல் இருந்திருக்கலாம்

ஒரு நல்ல கதை தான். இலக்கை எட்டுவதில் நிறைய எமோஷ்னல் மிஸ்ஸிங் இருப்பதால் வான்மூன்று நம்மை முழுதாக வசீகரிக்க தவறிவிட்டது
2.25/5